சினிமா
படம் பண்ணும் பிளாஸ்ட்… இசை பண்ணும் பீஸ்ட்.! “Dude” படத்தின் சீக்ரெட்டை போட்டுடைத்த சாய்.!
படம் பண்ணும் பிளாஸ்ட்… இசை பண்ணும் பீஸ்ட்.! “Dude” படத்தின் சீக்ரெட்டை போட்டுடைத்த சாய்.!
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் புதிய முகங்கள் தோன்றுகின்றன. ஆனால் அந்த முகங்களில் சிலர் மட்டுமே தங்களது திறமையால், தன்னம்பிக்கையால், மீடியா பரிணாமத்தால் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு புதிய இசையமைப்பாளர் தான் சாய் அபயங்கர்.அவரது முதல் திரைப்படம் ‘Dude’ தீபாவளி பண்டிகைக்காக தயாராகி வருகிறது. சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் அளித்த கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அவரது தன்னம்பிக்கை, பண்புகள், மற்றும் அவர் இசை மீது வைத்துள்ள காதல் இவரை ரசிகர்களிடம் பிரத்தியோகமாக மாற்றியுள்ளது.‘Dude’ திரைப்படம், இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் படம். இதில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன் மற்றும் கதாநாயகியாக மமிதா பாஜு நடித்துள்ளனர். இப்படத்தில் முக்கிய இசையமைப்பாளராக தனது முதல் வாய்ப்பை பெற்றிருக்கிறார் சாய் அபயங்கர்.இந்த படம் தீபாவளி அன்று வெளியாக இருப்பது ஒரு சிறப்பான தருணம் மட்டுமல்ல, ஒரு இளம் இசையமைப்பாளருக்கான மிகப்பெரிய அங்கீகாரமாகவும் இது கருதப்படுகிறது. இதை பற்றியே அவர் உருக்கமாக தற்பொழுது கூறியுள்ளார். “நான் என்ன பண்ணியிருக்கான் என்பதை படம் சொல்லும். என்னுடைய முதலாவது படம் ‘Dude’ தீபாவளிக்கு வருகின்றது என்பதே ஒரு ஸ்பெஷல். அதில் பிரதீப், மமிதா இருவரின் நடிப்பை பார்க்கும் பொழுது பின்னணி இசை இன்னும் வாசிக்கணும் என்று தோணும். படிப்பு முக்கியம் தான்… ஆனா எனக்கு முக்கியமாக படவில்லை.” என்று கூறியுள்ளார் சாய் அபயங்கர். சமூக வலைதளங்களில் ஏற்கனவே சாய் அபயங்கரின் இசைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அவரது போட்டோக்கள், ஷோர்ட் வீடியோக்கள், டீசர்களுக்கான இசை என்பன ரசிகர்களிடையே விருப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
