சினிமா
பான் இந்திய லெவலில் களமிறங்கும் விமல்! ‘மகாசேனா’ படத்தின் எதிர்பார்ப்பைத் தூண்டிய அப்டேட்
பான் இந்திய லெவலில் களமிறங்கும் விமல்! ‘மகாசேனா’ படத்தின் எதிர்பார்ப்பைத் தூண்டிய அப்டேட்
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து வரும் நடிகர் விமல், தற்போது ‘மகாசேனா’ என்ற புதிய படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். பிரபல காமெடி நடிகர் யோகி பாபு மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை தினேஷ் கலைச்செல்வன் இயக்கியதுடன், இப்படத்தின் மிகுந்த எதிர்பார்ப்பு கொண்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூரி அக்டோபர் 11 அன்று தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில், விமல் ஒரு அதிரடியான அவதாரத்தில் தோன்றியுள்ளார். யானைகளின் நடுவே விமல் நிற்பது போன்ற கலைச்செல்வனின் க்ரியேட்டிவ் ரசிகர்களை கவரும் விதத்தில் அமைந்திருந்தது. இந்நிலையில், ‘மகாசேனா’ படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இது ஒரு பான் இந்திய ரிலீஸ் ஆகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.இது நடிகர் விமலுக்கு புதிய திருப்பமாக இருக்கும் என கருதப்படுகிறது. ஏனெனில் இது அவரது முதல் பான்-இந்திய படம் என்பது குறிப்பிடத்தக்கது. பல மொழிகளில் வெளியாகும் அளவுக்கு இப்படம் உருவாக்கப்பட்டது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இப்படத்தின் வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
