சினிமா
புன்னகை அரசி சினேகாவின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா
புன்னகை அரசி சினேகாவின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா
ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக 90ஸ் கிட்ஸ் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சினேகா. இவர் என்னவளே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.இதன்பின், ஆனந்தம், வசீகரா, ஜனா, போஸ், வசூல் ராஜா, ஆட்டோகிராஃப் என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார். முன்னணி நடிகையாக வலம் வந்த சினேகா பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.சினிமாவை தாண்டி தற்போது தொழிலதிபராகவும் இருக்கும் நடிகை சினேகாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சினேகாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 45 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கி வருகிறாராம். கோட் படத்திற்காக அவர் ரூ. 1 கோடி வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
