Connect with us

இலங்கை

3 குழந்தைகளை கழுத்தறுத்து கொன்ற தந்தை ; இறுதி வாக்குமூலத்தால் அதிர்ச்சியில் உறைந்த பொலிஸார்

Published

on

Loading

3 குழந்தைகளை கழுத்தறுத்து கொன்ற தந்தை ; இறுதி வாக்குமூலத்தால் அதிர்ச்சியில் உறைந்த பொலிஸார்

தஞ்சை அருகே 3 குழந்தைகளை கழுத்தறுத்து கொன்றது ஏன் என்று கைதான தந்தை பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

ததஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே, மனைவி மற்றொருவருடன் சென்ற ஆத்திரத்தில் தன் மூன்று குழந்தைகளையும் கழுத்தறுத்து கொலை செய்த தந்தை ஒருவர் பொலிஸில் சரணடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை உண்டாகியுள்ளது.

Advertisement

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த மூன்று பிள்ளைகளின் தந்தை, மதுக்கூர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சர்வராக பணியாற்றி உள்ளார்.

அவரது மனைவி மற்றும் குழந்தைகளான 12 , 8 வயதுடைய பெண் பிள்ளைகளும், 5 வயதுடைய ஆண் பிள்ளை ஒன்றுடனும் சுமூகமாக வாழ்க்கையை நடாத்தி வந்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் மனைவி சமூக வலைதளம் மூலமாக மன்னார்குடியை சேர்ந்த ஒரு வாலிபருடன் பழக்கமாகி, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. அதிலிருந்தே வினோத்குமார் விரக்தியில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மதுபோதையில் வீட்டிற்கு வந்த கணவன்  தனது வீட்டை பூட்டிக்கொண்டு தனது இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனை கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து மதுக்கூர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

Advertisement

அப்போதுஅளித்த வாக்கு மூலத்தில், ‘எனது மனைவி நித்யா மன்னார்குடியை சேர்ந்த ஒருவருடன் பழகி வந்தார். இதை நான் கண்டித்தேன். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு என்னையும், 3 குழந்தைகளை விட்டுவிட்டு அந்த நபருடன் ஓடிவிட்டார்.

எனது மனைவி வேறு ஒருவருடன் ஓடிவிட்டதால் அவள் மீது நான் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தேன். கடந்த 6 மாதமாக போதிய வருமானமும் இல்லை. 3 குழந்தைகளையும் என்னால் பராமரிக்க முடியவில்லை. எனக்கு உதவி செய்வதற்கும் யாரும் இல்லை.

இதனால் குடித்துவிட்டு நான் போதையில் எனது மூன்று குழந்தைகளையும் கழுத்தை அறுத்துக் கொலை செய்தேன்’ என்றார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன