தொழில்நுட்பம்
7,800mAh பேட்டரி, 165Hz டிஸ்பிளே: ஒன் பிளஸின் ஏஸ்-6 எப்போது ரிலீஸ்? வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்!
7,800mAh பேட்டரி, 165Hz டிஸ்பிளே: ஒன் பிளஸின் ஏஸ்-6 எப்போது ரிலீஸ்? வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்!
ஸ்மார்ட்போன் உலகில் புயலைக் கிளப்ப ஒன்பிளஸ் தயாராகிவிட்டது. இந்த மாதத்தின் கடைசியில் அதன் ஃபிளாக்ஷிப் மாடலான ஒன்பிளஸ்-15 உடன் சேர்த்து, புதிய ஒன்பிளஸ் ஏஸ் 6 சீரிஸும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவிருக்கிறது. வெளியீட்டுத் தேதி நெருங்கி வரும் நிலையில், இந்த போனின் முக்கிய அம்சங்கள் குறித்த தகவல் கசிந்துள்ளது.ஒன்பிளஸ் ஏஸ் 6 போன், சீனாவில் உள்ள கட்டாயச் சான்றிதழ் (3C) இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்த மாடல் விரைவில் சீனச் சந்தைக்குள் நுழைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சான்றிதழில், PLQ110 என்ற மாடல் எண்ணுடன், மிரட்டலான 120W ஃபாஸ்ட் சார்ஜிங் திறன் (11V/11A) இருப்பது தெரிய வந்துள்ளது.தொழில்நுட்ப டிப்ஸ் நிபுணரான Debayan Roy (Gadgetsdata), இந்த Ace 6-ன் சீன வேரியண்ட்டின் அதிமுக்கிய அம்சங்களை வெளியிட்டுள்ளார். இந்த விவரங்கள் ஒன்பிளஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்த போன், தற்போது ஒன்பிளஸ் 15 ஃபிளாக்ஷிப்பில் இருக்கும் அதே ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் மூலம் இயக்கப்படலாம். செயல்திறனில் சமரசம் இருக்காது.ஸ்மார்ட்போன் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு, 7,800mAh பேட்டரி இதில் இருக்கலாம். துணையாக, 3C சான்றிதழில் உறுதி செய்யப்பட்ட 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டும் இருக்கிறது. கேமிங் ரசிகர்களுக்காகவே பிரத்யேகமாக, 165Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 1.5K BOE பிளாட் LTPO ஓஎல்.இடி திரையைக் கொண்டிருக்கலாம். மென்மையான அசைவுகளும், துல்லியமான காட்சிகளும் உறுதி. மெட்டல் ஃபிரேம் கொண்டு உருவாக்கப்படும் இந்த போன், மேலும் IP68 மதிப்பீட்டைப் பெற்று, தூசி மற்றும் நீர் பாதிப்பிலிருந்து பாதுகாப்பை உறுதி செய்யும் எனத் தெரிகிறது. பாதுகாப்பிற்காக, அதிநவீன அல்ட்ராசோனிக் கைரேகை ஸ்கேனர் (Ultrasonic Fingerprint Scanner) கொடுக்கப்படலாம். பின் பகுதியில் டூயல் கேமரா அமைப்பில், 50mp முதன்மை சென்சார் மற்றும் 8mp 2-ம் நிலை சென்சார் இடம்பெறும்.சீனாவில் இது ஒன்பிளஸ் ஏஸ்-6 என்ற பெயரில் அறிமுகமானாலும், இந்தியா மற்றும் உலகச் சந்தைகளில் இது OnePlus 15R என்ற புதிய பெயரில் விற்பனைக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏஸ்-5 சீரிஸின் வெற்றியைத் தொடர்ந்து, ஏஸ்6 மாடல் அதிக சக்தி, பிரம்மாண்ட பேட்டரி மற்றும் சிறந்த திரையுடன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தத் தயாராகிவிட்டது.
