இலங்கை
இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டிருந்த சஷீந்திர ராஜபக்ஷவிற்கு பிணை!
இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டிருந்த சஷீந்திர ராஜபக்ஷவிற்கு பிணை!
பொது சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் புரிந்ததாக இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
சந்தேக நபரின் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.
‘அரகலய’ காலத்தில் போராட்டக்காரர்களால் மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டிருந்த தனது அரசியல் அலுவலகத்தை அழித்ததற்காக இழப்பீடாக ரூ. 8,850,000 ஐ சட்டவிரோதமாகப் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
