Connect with us

சினிமா

தமிழன் இந்தியனில்லயா.? மீனவ சமூக வேதனையை உறைக்கவைத்த மன்சூர் அலிகான்.!

Published

on

Loading

தமிழன் இந்தியனில்லயா.? மீனவ சமூக வேதனையை உறைக்கவைத்த மன்சூர் அலிகான்.!

தென்னிந்திய நடிகரான மன்சூர் அலிகான், தனது நடிப்புத் திறமையால் மட்டுமல்லாமல் நேர்மையான கருத்துகள், சமூக அவலங்களுக்கு எதிரான உரையாடல்களாலும் அதிக கவனத்தை ஈர்த்துள்ளார். தன்னுடைய சினிமா வாழ்க்கையில் வில்லன் கதாபாத்திரங்கள், சின்ன சின்ன supporting roles ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க நடிப்பை வெளிப்படுத்திய இவர், தற்போது சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஒரு பதிவு காரணமாக மீண்டும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.மன்சூர் அலிகான் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், அவர் ஒரு மீனவனைப் போல, கையில் வலை எடுத்து, கடற்கரையில் நின்றபடி போஸ் கொடுத்துள்ளார். அந்த படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.இந்த போட்டோஸுடன் இணைத்து “சுதந்திரமா மீன் புடிக்க முடியல சிங்களச் சிறையில தமிழ்நாட்டு மீனவர்கள்! தமிழன் இந்தியனில்லயா ???” என்ற பதிவையும் வெளியிட்டுள்ளார். மன்சூர் அலிகானின் இந்த பதிவு மீனவ சமூகத்தின் துயரங்களை பிரதிபலிக்கும் வகையில் இருக்கின்றன. வலையுடன் கடற்கரையில் நின்ற ஒரு மீனவன் போல தோன்றி, கலைஞனாக மட்டுமல்லாமல், ஒரு சமூக செயற்பாட்டாளராகவும் அவர் செயல்படுவதை இந்த புகைப்படங்கள் நமக்கு நினைவூட்டுகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன