இந்தியா
விடிய விடிய பெய்து வரும் மழை… வெள்ளக் காடாக காட்சியளிக்கும் புதுச்சேரியின் ஏனாம்!
விடிய விடிய பெய்து வரும் மழை… வெள்ளக் காடாக காட்சியளிக்கும் புதுச்சேரியின் ஏனாம்!
புதுச்சேரி பிராந்தியமான ஏனாம் பகுதியில் நேற்று முதல் விடிய விடிய தற்போது வரை மழை பெய்து கொண்டிருப்பதால் ஏனாம் பகுதி முழுவதும் வெள்ளக்காடு காட்சியளிக்கிறதுஆந்திர மாநிலத்தில் தற்போது பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி பிராந்தியமான காக்கிநாடா அருகே உள்ள ஏனாம் பகுதியில் நேற்று முதல் மழை பெய்து கொண்டே இருக்கிறது இதனால் ஏரி குளங்கள் வாய்க்கால்கள் நிரம்பி தண்ணீர் வீதிக்குள் நிரம்பி வழிகிறது இதனால் இதனால் அப்பகுதி வெள்ளக்காடு ஆக காட்சியளிக்கிறது குருத்துப்பேட்டை என்ற கிராமத்தில் சூரிய நாராயணன் எங்கள் வீட்டில் பிடித்தாக்கி ஒரு வீடு பதில் சுவர் விரிச்சல் விடப்பட்டுள்ளது. ஆனால் உயிர் சேதம் ஏதுமில்லை.மேலும் பள்ளிகளில் பருவ தேர்வு நடந்து கொண்டிருப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடவில்லை மேலும் கல்லூரி பகுதிகளில் தீயணைப்புத் துறையினர் பொதுப்பணித்துறையினர் நகராட்சி ஆகிய ஊழியர்கள் தண்ணீர் சூழ்ந்த இடங்களில் பணிகளை செய்து வருகின்றனர். செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் ஏனாம் பகுதியில் கனமழை தொடர்கிறது. திங்கள் காலை 8 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை 86.40 மிமீ மழை பதிவாகியுள்ளது.விடிய விடிய கொட்டித்தீர்க்கும் மழை… மழை வெள்ளத்தில் மிதக்கும் புதுச்சேரியின் ஏனாம்!#Puducherrypic.twitter.com/R1A5e3XGQ7செவ்வாய்க்கிழமை ஏனாம் பகுதியில் மின்னல் மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. திங்கள்கிழமை காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை 86.40 மிமீ மழை பதிவாகியுள்ளது. தேர்வுகள் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. கல்வித் துறையின் அணுகுமுறையை பெற்றோர்கள் விமர்சித்து வருகின்றனர். குரசம்பேட்டா கிராமத்தில் ஒரு கட்டிடத்தின் தூண் இடியுடன் இடிந்து விழுந்தது. பிள்ளைராய தெருவில் உள்ள பல வீடுகள் மற்றும் கடைகளுக்குள் மழைநீர் புகுந்தது.
