இலங்கை
வைத்தியசாலை ஆம்புலன்ஸ் மீது விழுந்த பாரிய மரக்கிளை
வைத்தியசாலை ஆம்புலன்ஸ் மீது விழுந்த பாரிய மரக்கிளை
பதுளை போதனா வைத்தியசாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அம்பியூலன்ஸ் மற்றும் கார் மீது பெரிய ஆலமரத்தின் மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று (14) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வைத்தியர் ஒருவருக்கு சொந்தமான கார் மீதே மரக்கிளை முறிந்து விழுந்துள்ளது.
எனினும் இதன்போது எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
