இந்தியா
உத்தரவாதம் அளித்த உள்துறை அமைச்சர்: போராட்ட அறிவிப்பை வாபஸ் பெற்ற புதுச்சேரி மாணவர் இளைஞர் அமைப்புகள்
உத்தரவாதம் அளித்த உள்துறை அமைச்சர்: போராட்ட அறிவிப்பை வாபஸ் பெற்ற புதுச்சேரி மாணவர் இளைஞர் அமைப்புகள்
புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத நிர்வாகத்தை கண்டித்து புதுச்சேரி அனைத்து மாணவர் – இளைஞர் அமைப்புகளின் சார்பாக வருகின்ற 16ஆம் தேதி கவர்னர் அலுவலகத்தை முற்றுகையிற்று போராட்டம் நடத்த இருந்தது. உடனடியாக புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நேற்று இரவு அமைச்சர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.பல்கலைக்கழக துணைவேந்தர் பிரகாஷ் பாபு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன், மாணவர் இளைஞர் அமைப்புகளின நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பாலியல் புகாருக்கு உள்ளான நான்கு பேராசிரியர்கள் மீது புதுச்சேரி காவல்துறை சார்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும், புகார் கமிட்டி (ICC) 2015 யுஜிசி வழிகாட்டுதல்படி தேர்தல் மூலம் மாணவர் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படும்.கல்லூரியில் நடக்கும் பாலியல் புகார்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 24 மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என அமைச்சர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உறுதியளிக்கப்பட்டது. மாணவர் இளைஞர் அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து 16/10/2025 வியாழக்கிழமை அன்று ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தை திரும்ப பெறுவதாக மாணவர் கூட்டமைப்பு கூட்டமைப்பு அமைச்சரின் முன்பு ஒப்புக்கொண்டனர்.பேச்சுவார்த்தையின் போது பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் ரஜினிஷ் பூட்டானி, மாணவர் நல அதிகாரி வெங்கட்ராவ், OSD பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரி வம்சித ரெட்டி, காவல்துறை எஸ்.பி. சுருதி எரகட்டி, இந்திய மாணவர் சங்கம் சார்பாக பிரவீன்குமார், ஸ்டீபன்ராஜ், அகிலா, சூர்யா, ஐஜாஸ், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் ஆகாஷ், முரளி, முற்போக்கு மாணவர் கழகம் தமிழ்வாணன், மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் எழிலன், இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை இளங்கோவன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆனந்த், சஞ்சய்சேகரன், ரஞ்சித்குமார் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தையில் கலந்துகொண்டனர். செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
