சினிமா
ஒன்னும் தெரியாத பாப்பா போட்டுச்சாம் தாப்பா!! அரோராவை வெளுத்த ரம்யா ஜோ..
ஒன்னும் தெரியாத பாப்பா போட்டுச்சாம் தாப்பா!! அரோராவை வெளுத்த ரம்யா ஜோ..
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். தொடங்கி ஒரு வாரமான நிலையில், 20 போட்டியாளர்களில் நந்தினி, பிரவீன் காந்தி என இருவர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.இந்த வாரம் ரம்யா ஜோ, அரோரா இருவருக்கும் இடையே காரசாரமான சண்டை நடந்துள்ளது. அதாவது பிக்பாஸ் வீட்டில் இருந்து சூப்பர் டீலக்ஸ் வீட்டிற்கு சென்ற ஆதிரைக்கு நாமினேஷ்ன் ஃப்ரீ பாஸை ரம்யா ஜோ வழங்கினார்.அதைவிட்டுக் கொடுத்தார் என்று கூட கூறலாம். காரணம் டீலக்ஸ் வீட்டிற்கு சென்றதும் அங்கு நாமினேஷன் ஃப்ரீ பாஸை வைத்திருந்தவர்களிடம் தனக்கு நாமினேசன் ஃப்ரீ பாஸ் வேண்டும். இல்லை என்றால் நான் இந்த வாரத்தில் எலிமினேட் ஆகிவிடுவேனோ என்ற பயம் இருக்கிறது என்று தெரிவித்து நாமினேஷன் ஃப்ரீ பாஸை வாங்கினார். இதுதான் நடந்தது.ஆதிரைக்கு நாமினேஷன் ஃப்ரீ பாஸை வழங்க, ரம்யா ஜோவும் ஓட்டுப்போட்டார். இப்படி இருக்கும் போது தான் தற்போது புது பஞ்சாயத்து தொடங்கியிருக்கிறது. ஆதிரை கெஞ்சிக்கேட்டதால், தன்னிடம் இருக்கும் நாமினேஷன் ஃப்ரீ பாஸை விட்டுக்கொடுத்ததாக ரம்யா ஜோ தன்னிடம் கூறியதாக, அரோரா ஆதிரையிடம் கூறியதுதான் பிரச்சனை ஆரம்பித்துள்ள்து.இதுகுறித்து அரோரா ஆதிரையிடம், அவள் எப்படி விட்டுக்கொடுக்க முடியும் என்றும் ஆதிரையை நான் நாமினேட் செய் என்று நான் சொல்லவில்லை, ஆனால் அரோரா எப்படி அதைக்கூறுகிறார், அவள் செருப்பைக்கழட்டி அடிக்கச்சொல் என்று ரம்யா கோபத்தில் கத்த, வாயை மூடு ரம்யா என்று அரோரா கூறியிருக்கிறார்.உச்சக்கட்டத்தில் கோபமான ரம்யா, சும்மா இரு அரோரா, நடிக்காத, ஒன்னும் தெரியாத பாப்பா, போட்டுச்சாம் தாப்பான்னு நடிக்காத, இங்கே இருக்கும்போது நீ என்னென்ன பேசுனன்னு நான் சொல்லவா? உன்னை போன்ற புத்தி எல்லாம் எனக்கு இல்லை, நீ பேசாத என்று கண்டமேனிக்கு கத்தியிருக்கிறார்.
