பொழுதுபோக்கு
காம்பில் குத்தினால் பால் வராது, இதுதான் சிம்பிள் ட்ரிக்; பழுத்த பலா பழம் கண்டுபிடிக்க அருண்பாண்டியன் ஐடியா!
காம்பில் குத்தினால் பால் வராது, இதுதான் சிம்பிள் ட்ரிக்; பழுத்த பலா பழம் கண்டுபிடிக்க அருண்பாண்டியன் ஐடியா!
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட அருண்பாண்டியன், தன்னை ஒரு இயற்கை விவசாயி என்று சொல்லிக்கொண்டு, தனது ஓய்வு நேரத்தில் சொந்த ஊரில் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகிறார். அவ்வப்போது நிகழச்சிகளில் இது குறித்து பேசி வரும் அருண்பாண்டியன் ஒரு பலா பழம் பழுத்துவிட்டால் எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.தமிழ் சினிமாவில் அதிரடிக்கு பெயர் பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் அருண்பாண்டியன். 1987-ம் ஆண்டு வெளியான இளஞ்ஜோடிகள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், அடுத்து, விசு இயக்கத்தில் வெளியான சிதம்பர ரகசியம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தில், எஸ்.வி.சேகர், விசு ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். இந்த படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.தொடர்ந்து, ஊமை விழிகள், இணைந்த கைகள், ஊழியன், தாயகம், உள்ளிட்ட சில வெற்றிப்படங்களில் நடித்திருந்த அருண்பாண்டியன், வீரநடை, ரிஷி உள்ளிட்ட சில படங்களில் வில்லனாகவும், நடித்துள்ள இவர், நடிகராக மட்டும் இல்லாமல், 2002-ம் ஆண்டு வெளியான தேவன் படத்தின் மூலம் இயக்குனராகவும் முத்திரை பதித்த அருண்பாண்டியன், அடுத்து விகடன் என்ற படத்தையும் இயக்கியிருந்தார். 2010-ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் விருதகிரி என்ற படத்தில் நடித்திருந்தார்.சமீபத்தில் வெளியான ரைட், அக்கேணம் ஆகிய படங்களில் நடித்திருந்த அருண்பாண்டியன், தமிழ் சினிமாவில், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முக திறமை கொண்டவர். இயற்கை விவசாயத்திலும் ஆர்வம் கொண்ட இவர், சமீபத்திய ஒரு நிகழ்ச்சியில், ஜப்பான் நாட்டு மாம்பழம் தனது தோட்டத்தில் இருப்பதாகவும், அந்த மாம்பழத்தின் ஒரு கிலோ விலை ரூ 1 லட்சம் என்றும், சமீபத்தில் தான் அதை சாப்பிட்டதாகவும் கூறியிருந்தார்.இதனிடையே சமீபத்திய பிகைண்ட்வுட்ஸ் நிகழ்ச்சியில் பலா பழம் பழுத்துவிட்டதா என்பதை எப்படி பார்ப்பது என்று கூறியுள்ளார். மேடையில் நந்தகுமார் என்ற இயற்கை விவசாயி ஒருவர் பலா பழம் கொண்டு வர, அவர் இந்த படம் பழுத்துவிட்டதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்று அருண்பாண்டியன் கேட்கிறார். இதற்கு பதில் அளித்த அவர், நல்ல பழுத்த பழம் முட்கள் நன்றாக விரிந்து இருக்கும், அடுத:து நல்ல வாசனை வரும். அடுத்து தட்டி பார்த்தால் டெக் டெக் என்று சத்தம் வரும் என்று சொல்ல, அதற்கு அருண் பாண்டியன் இன்னும் ஒரு வழி இருக்கு என்று சொல்கிறார். இதை கேட்ட நந்தகுமார் தனக்கு தெரியவில்லை என்கிறார்.அதன்பிறகு இதற்கு பதில் சொல்லும் அருண் பாண்டியன், நன்றாக பழுத்த பலா பழத்தின் காம்பில் குத்தி பார்த்தால் அதில் பால் வராது தண்ணீராக வரும். அப்படி வந்தால், பலா பழம் பழுத்துவிட்டது என்று தெரிந்துகொள்ளலாம். இப்போது புரிந்ததா நான் விவசாயம் பண்ணுகிறேன் என்று என கூறியுள்ளார். மேலும் பலாப்பழத்தில் அதிகமான வெரைட்டி இருக்கிறது. தென்னை மரத்திலும் அப்படித்தான். ஒரு தென்னைக்கும் இன்னொரு தென்னைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கு என்று கூறியுள்ளார்.
