விளையாட்டு
வெற்றிப் பாதைக்கு திரும்புமா தமிழ் தலைவாஸ்? குஜராத் ஜெயண்ட்சுடன் இன்று மோதல்
வெற்றிப் பாதைக்கு திரும்புமா தமிழ் தலைவாஸ்? குஜராத் ஜெயண்ட்சுடன் இன்று மோதல்
புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது டெல்லியில் லீக் ஆட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், புரோ கபடி லீக் தொடரில் இன்று இரவு 9.30 மணிக்கு தொடங்கும் 87-வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.நடப்பு தொடரில் அர்ஜுன் தேஷ்வால் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 15 ஆட்டங்களில் ஆடி 6-ல் வெற்றி, 9-ல் தோல்வி என 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கிறது. மறுபுறம், ராகேஷ் தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் 14 ஆட்டங்களில் ஆடி 5-ல் வெற்றி, 9-ல் தோல்வி என 10 புள்ளிகளுடன் 10-வது இடத்தில் இருக்கிறது. அடுத்த சுற்றுக்கு முன்னேற இரு அணிகளுக்கும் இது முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. அதனால், இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. நேருக்கு நேர் தமிழ் தலைவாஸ் – குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் இதுவரை 13 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 7 முறை குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும், 5 முறை தமிழ் தலைவாஸ் அணியும் வென்றுள்ளன. ஒரு போட்டி சமனில் முடிந்தது. இந்த சீசனில் இந்த இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியே வென்றது. அதற்கு பதிலடி கொடுக்க தமிழ் தலைவாஸ் நினைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
