சினிமா
திருமண மோசடி – விசாரணைக்காக மனைவியுடன் நேரில் ஆஜரான மாதம்பட்டி ரங்கராஜ்
திருமண மோசடி – விசாரணைக்காக மனைவியுடன் நேரில் ஆஜரான மாதம்பட்டி ரங்கராஜ்
நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னிடம் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய ஜாய் கிரிசில்டாவை காதலித்து திருமணம் செய்தார். ஆனால் அவர் கர்ப்பமான பின் அவரை ஏமாற்றினார். இது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையானது. இதைத்தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றியதாக சில மாதங்களுக்கு முன்பு ஜாய் புகார் கொடுத்தார். அதற்குப் பின்பு தன்னைப் பற்றி அவதூறு பரப்பிய ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்க கோரி மாதம்பட்டி நீதிமன்றத்தை நாடினார். எனினும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் அப்செட் ஆன ஜாய் கிரிசில்டா, கடந்த வாரம் சென்னை தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்தார். மேலும் தன்னைப் போன்று பத்து பெண்களை ரங்கராஜ் ஏமாற்றி இருப்பதாகவும் கூறினார். இந்த நிலையில், திருமண மோசடி புகார் தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவியுடன் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் அவருடைய மனைவி மற்றும் ஜாய் கிரிசில்டா ஆகியோர் விசாரணைக்காக நேரில் ஆஜராகி உள்ளனர்.
