சினிமா
ப்ரீ வெட்டீங் மாதிரி இது ப்ரீ பர்த்டே!! கீர்த்தி சுரேஷின் க்யூட் கிளிக்ஸ்..
ப்ரீ வெட்டீங் மாதிரி இது ப்ரீ பர்த்டே!! கீர்த்தி சுரேஷின் க்யூட் கிளிக்ஸ்..
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் பக்கமும் கால் பதித்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், பேபி ஜான் படத்தில் முக்கிய ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இப்படம் ரிலீஸுக்கு முன் தன்னுடைய 15 ஆண்டுகால காதலரை திருமணம் செய்தார்.திருமணத்திற்கு பின் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ள கீர்த்தி சுரேஷ், பாலிவுட் போனதும் பாலிவுட் நடிகைகளின் கிளாமர் லுக்கிற்கு சமமான ஆடைகளை அணிந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்து வருகிறார்.நாளை அக்டோபர் 17 ஆம் தேதி அவரது 33வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார் கீர்த்தி. அதற்காக ப்ரீ பர்த்டே போட்டோஷூட் எடுத்து ரசிகர்களின் வாழ்த்துக்களையும் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
