இலங்கை
யாழில் இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்
யாழில் இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்
சட்டவிரோதமான முறையில் பணத்தை ஈட்டியதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் தனபால மேற்கொண்டு வருகின்றார்.
அவர்களிடம் சந்தேகிக்கப்படும் அளவிற்கு ஒரு தொகை பணம் காணப்பட்டதால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இந்த இடமாற்றத்திற்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு இடமாற்றம் செய்யப்படும் இருவரும் விரைவில் நெடுந்தீவு பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவார்கள் என அறியமுடிகிறது.
