சினிமா
விஜய் சேதுபதி சினிமால ஜூனியர்..யாரையும் பேச விடமாட்ராரு!! பிக்பாஸில் வெளியேறிய பிரவீன் காந்தி..
விஜய் சேதுபதி சினிமால ஜூனியர்..யாரையும் பேச விடமாட்ராரு!! பிக்பாஸில் வெளியேறிய பிரவீன் காந்தி..
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். தொடங்கி ஒரு வாரமான நிலையில், 20 போட்டியாளர்களில் நந்தினி, பிரவீன் காந்தி என இருவர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய இயக்குநர் பிரவீன் காந்தி, பல பேட்டிகளில் கலந்து கொண்டு பிக்பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்கள் மற்றும் விஜய் சேதுபதி தன்னிடம் நடந்து கொண்ட விதத்தை பற்றி பகிர்ந்து கொண்டிருக்கிறார்.சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், விஜய் சேதுபதி உட்காருங்க என்று சொன்னது பற்றி உங்கள் கருத்து என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு பிரவீன் காந்தி, அங்க ஒன்னுதான், விஜய் சேதுபதி எதிர்ப்பதா? என்பதில் டென்ஷன் வந்துவிட்டது. எனக்கு அவர் சினிமாவில் ஜூனியர், பிக்பாஸில் எனக்கு சீனியர்.இப்போ அவர் இங்க வந்து ஒரு வேலை எடுத்து பண்றாரு, இப்போ நான் அவருக்கு ஜூனியர். அவரை எதிர்த்து பேசுறதா? அவருக்கு டஃப் ஃபைட் கொடுப்பதான்னு தெரியல. விஜய் சேதுபதி அவர்களே, போட்டியாளர்களை பேசவிடுங்கள், நீங்கள் யாரையும் பேசவிடமாட்றீங்க, கொஞ்சம் பேச விடுங்கள்.என்னை விட்டுவிடுங்கள், நீங்கள் பிஸியான டைமில் அங்க வந்து இருக்கீங்க, உங்கள் பிஸிக்கு அங்க யாரும் இல்லை, இருந்தாலும் அவர்கள் பேசினால் தான் சொல்ல வருவது புரியும். அதற்குள் அவர்களை நோஸ்கட் பண்ணுவதிலேயே இருக்கீங்க விஜய் சேதுபதி அவர்களே, கொஞ்சம் மாத்திக்கணும்.நீங்களும் நானும் நல்ல நண்பர். அவருக்கு அட்வைஸ் பண்ணும் அளவிற்கு நான் சீனியர். என்னை மட்டும் இல்லை, எல்லாரிடமும் அப்படித்தான். 19 போட்டியாளர்களையும் தன்னுடைய ஆளுமைக்கு கொண்டுவர பார்க்கிறார்.நான் சொல்றதை தான் நீங்கள் கேட்கணும், அவர் தான் பிக்பாஸ் மாதிரி இருக்கு என்று பிரவீன் காந்தி விஜய் சேதுபதியை விமர்சித்து பேசியிருக்கிறார்.
