Connect with us

சினிமா

டீசல் படம் எப்படி இருக்கு…சட்டிக்குள் புளி சாதம், தயிர் சாதம்!! கழுவி ஊற்றும் செய்யாறு பாலு..

Published

on

Loading

டீசல் படம் எப்படி இருக்கு…சட்டிக்குள் புளி சாதம், தயிர் சாதம்!! கழுவி ஊற்றும் செய்யாறு பாலு..

இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய், சாய் குமார், அனனயா, கருணாஸ், போஸ் வெங்கட், ரமேஷ் திலக், காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் அக்டோபர் 17 ஆம் தேதி இன்று டீசல் படம் ரிலீஸாகியுள்ளது.டீசல் படம் எப்படி இருக்கிறது என்று பலர் தங்களின் கருத்தை கூறி வரும் நிலையில், பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு படம் எப்படி இருக்கு என்று கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.அதில் வடசென்னையில், ஒரு மீனவ கிராமத்தில் 17 கி.மீட்டருக்கு கச்சா எண்ணெய் குழாய்யை மத்திய அரசு பதிக்கிறது. இதனால் அந்த மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்க, ஆத்திரப்படும் சாய்குமார், அந்த குழாயில் இருந்து கச்சா எண்ணெயை திருடி மும்பைக்கு அனுப்புகிறார்.அங்கு இந்த கச்சா எண்ணெயில் இருந்து தார், டீசல், பெட்ரோல் என தனித்தனியாக பிரிக்கப்பட்டு டீசல் மற்றும் பெட்ரோல் சென்னைக்கு வருகிறது. அதில் சாய் குமார், பெட்ரோல் பங்கில் கலப்படம் இல்லாமல் விற்கிறார்.பின் வடஎன்னை பகுதியில் துறைமுகம் கட்ட சாய்குமாரின் உதவியை கேட்டு கார்பெரே முதலாளியான பதான் கூற அதற்கு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று மறுத்துவிடுகிறார். ஆனால் பதான், அரசியல்வாதியின் உதவியுடன் சாய்குமாரை ஜெயிலில் தள்ள துறைமுகத்தையும் கட்டுகிறார்கள்.அப்போது சாய்குமாரின் வளர்ப்பு மகனான ஹரிஷ் கல்யாண், போலிஸ் கமிஷ்னரை அடித்துவிட்டு தலைமறைவாகிட, கார்பெரேட் நிறுவனம் அந்த பகுதியில் துறைமுகம் கட்டியதா? சாய் குமார் வெளியே வந்தாரா? ஹரிஷ் எங்கே சென்றார் என்பதுதான் டீசல் படத்தின் மீதி கதை.டீசல் என்று படத்தின் கதையை வைத்ததும் எண்ணெய் வளங்கள் குறித்து பேசும் படமாக இருக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் படத்தை பார்க்கும் போது எண்ணை திருட்டு தொடர்பான கதையா? எண்ணை ஊழல் தொடர்பான கதையா? என்ற குழப்பத்தை கதை கூறுகிறது.ஒரு சட்டிக்குள் புளி சாதம், தயிர் சாதம், குழம்பு என்று அனைத்தையும் சேர்த்து கிண்டினால் எப்படி இருக்குமோ அப்படியொரு குழப்பம் இருந்தது. இயக்குநர் நல்ல கதையை தேர்வு செய்திருந்தாலும், அதன் திரைக்கதை சரியாக அமைக்க தெரியாமல் குழம்பியிருக்கிறார்.படத்தில் ஏகபட்ட நட்சத்திரங்கள் இருந்தாலும் அவர்களுக்கான கதாபாத்திரம் சரியாக கொடுக்காமல் கோட்டைவிட்டுள்ளார். பல இடத்தில் லாஜிக் மீறல் காட்சி, ஹரிஷ் கல்யாண் பல இடங்களில் பேசிக்கொண்டே இருப்பது பார்ப்பவர்களை கடுப்பாக்கி, படம் எதைநோக்கி செல்கிறது என்றே தெரியாமல், கடைசியில் எப்போ படம் முடியும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டது என்று பத்திரிக்கையாளர் செய்யறு பாலு தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன