இலங்கை
பெருமளவு கஞ்சாவுடன் கேரதீவில் இருவர் கைது
பெருமளவு கஞ்சாவுடன் கேரதீவில் இருவர் கைது
பூநகரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கேரதீவுப் பகுதியில், கஞ்சாவை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறப்பு அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமையவே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களிடம் இருந்து 48 கிலோ 400 கிராம் கஞ்சாப்பொதிகள் மீட்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
