சினிமா
‘பைசன்’ படம் தீபாவளிக்கு சரவெடி தானா.? பயில்வான் ரங்கநாதன் கொடுத்த ரிவ்யூ.!
‘பைசன்’ படம் தீபாவளிக்கு சரவெடி தானா.? பயில்வான் ரங்கநாதன் கொடுத்த ரிவ்யூ.!
மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் துருவ் விக்ரம் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து உருவான “பைசன்” திரைப்படம் இன்று, 17 அக்டோபர் 2025 அன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. சமூக அரசியல் படங்களால் தனக்கென தனி அடையாளம் பெற்ற மாரி செல்வராஜ், இந்த முறை ஒரு வித்தியாசமான கதையுடன் திரைக்கு வந்துள்ளார்.பைசன் திரைப்படம் ஒரு கபடி வீரனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. கிராமப்புறத்திலிருந்து துவங்கி, தேசிய அளவிலான போட்டிகளில் கலக்கும் ஒரு வீரனின் சவால்கள், சமூகக் கட்டமைப்புகள், உணர்வுகள், வெற்றிகள் இவை அனைத்தும் இணைந்து ஒரு வெறித்தனமான பயணமாக இப்படம் உருவாகியுள்ளது.மனதை உருக்கும் கதையம்சம், சிக்கலான மனித உறவுகள் என மாரி செல்வராஜ் அவர்களது பாணி இந்த படத்திலும் தெளிவாகவே தெரிகிறது.இந்த படம், துருவ் விக்ரமிற்கு தனி பயணத்தை ஆரம்பிக்கும் முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அசத்தலான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அவர், தற்போது சமூக உணர்வைத் தூண்டும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.இந்நிலையில் இப்படம் குறித்து பயில்வான் ரங்கநாதன் சில விமர்சனங்களை வெளியிட்டுள்ளார். அதன்போது, “துருவ் விக்ரம், தன்னுடைய அப்பா விக்ரமைப் போலவே, உணர்வுகளையும், உடல் மொழியையும் துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளார். இந்த படம் நிச்சயம் அவருக்கு நல்ல பெயர் கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.” என்றார் பயில்வான்.
