இலங்கை
மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரி மீண்டும் விளக்கமறியலில்
மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரி மீண்டும் விளக்கமறியலில்
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (17) உத்தரவிட்டார்.
28 மில்லியன் ரூபாய்க்கும் மேல் சொத்துக்களைச் சேர்த்தது தொடர்பில் விளக்கமளிக்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
