சினிமா
ஹாட்ரிக் அடித்தாரா பிரதீப்!! Dude படம் எப்படி இருக்கு..இதோ டிவிட்டர் விமர்சனம்..
ஹாட்ரிக் அடித்தாரா பிரதீப்!! Dude படம் எப்படி இருக்கு..இதோ டிவிட்டர் விமர்சனம்..
இயக்குநராக கோமாளி என்ற படத்தை இயக்கி மிகப்பெரியளவில் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். அப்படத்திற்கு பின் லவ் டுடே, டிராகன் என இரு படங்களில் நடித்து மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்தார். இரு படங்களில் கிட்டத்தட்ட 100 கோடி வரை பாக்ஸ் ஆபிஸ் பெற்று மெகா ப்ளாக் பஸ்டர் படமாகியது.இதனை தொடர்ந்து இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் டியூட் என்ற படத்தில் நடித்து இன்று அக்டோபர் 17 ஆம் தேதி ரிலீஸாகியுள்ளது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜு நடித்துள்ளார்.மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் பிரமோஷனைவிட பிரதீப்பின் மார்க்கெட் உச்சக்கட்டமாக எகிறியிருக்கிறது. தற்போது டியூட் படத்தினை பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் டிவிட் போட்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.அதில் ஒருவர் டியூட் ரொமாண்ட்டிக் காமெடி கதை, முதல் பாதி நன்றாகவும் இரண்டாம் பாதி சுமாராகவும் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.மேலும் முதல் பாதி மெதுவாக சென்றாலும் இடைவேளை காட்சியை நன்றாக வைத்திருக்கிறார். கீர்த்திஸ்வரனின் ஸ்க்ரீன்ப்ளேவிலும் இரண்டாம் பாதியிலும் தடுமாறியிருக்கிறார். மமிதாவும் நன்றாக நடித்திருக்கிறார்.சாய் அபியங்கரின் இசை இம்ப்ரெஸாகியிருக்கிறது. படத்தை ஒருமுறை பார்க்கலாம், 2.5 மதிப்பெண் கொடுக்கலாம் என்று கூறியிருக்கிறார்.
