சினிமா
15 கோடி சம்பளமா.? யாரோ எழுதி விட்டுடாங்க… நான் தான் திட்டு வாங்குறேன்.! மமிதா பைஜூ பகீர்.!
15 கோடி சம்பளமா.? யாரோ எழுதி விட்டுடாங்க… நான் தான் திட்டு வாங்குறேன்.! மமிதா பைஜூ பகீர்.!
சமீபத்தில் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழும் மமிதா பைஜூ, ஒரு செய்தியாளர் சந்திப்பில் உருக்கமான கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.அதில், தனது சம்பளம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவிய தவறான தகவல்கள், மற்றும் அதனைப் பின்தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் எழுப்பிய கருத்துகள் குறித்த தனது வருத்தத்தையும், கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் மமிதா.சமீபத்தில் ஒரு இணையதளத்தில், “நடிகை மமிதா பைஜூ 15 கோடி சம்பளம் வாங்குகிறார்” என்ற செய்தி வெளியாகியிருந்தது.இது விரைவில் சமூக ஊடகங்களில் பரவி, ரசிகர்கள் மத்தியில் வியப்பையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து, அந்த செய்தியின் கீழ் அதிக அளவிலான விமர்சனக் கருத்துகள் குவிந்ததாக நடிகை கூறியுள்ளார்.அந்த செய்தி குறித்து மமிதா பைஜூ, “நான் 15 கோடி சம்பளம் வாங்குறேன்னு யாரோ எழுதிட்டாங்க… அதுக்கு கமெண்ட்ஸில ‘இவளுக்கு 15 கோடியா?’ன்னு திட்டுறாங்க… யாரோ செய்த தப்பிற்கு எனக்கு திட்டு விழுது.” என்று கூறியுள்ளார். அதாவது, ஒரு தவறான தகவலை யாரோ போட, அதற்காக தன்னை பேசும் நிலைக்கு மக்கள் சென்றுவிட்டனர் என அவர் கூறுகிறார். இது போன்ற தவறான செய்திகளை சரிபார்க்காமல் பகிர்வதும், விமர்சனம் செய்வதும் கவலையை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
