பொழுதுபோக்கு
அது பொது கிடையாது… பத்திகிட்டு எரியும் விட்டுரு; திவாகரை கண்டித்த விக்ரம்
அது பொது கிடையாது… பத்திகிட்டு எரியும் விட்டுரு; திவாகரை கண்டித்த விக்ரம்
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நந்தினி, பிரவீன் காந்தி வெளியேறிய நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் 18 போட்டியாளர்கள் உள்ளனர். ஒவ்வொரு நாளும் என்ன டாஸ்க் இன்று நடக்கும் என்ன பிரச்சனை ஏற்படும் என்ற எதிர்பார்ப்பில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது.ஆரம்பத்தில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரை எல்லோரும் டார்கெட் செய்து வந்த நிலையில் தற்போது அவர் எல்லோருக்கும் செல்லப்பிள்ளை ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ஒவ்வொருத்தரும் தன் முகமூடிகளை கழற்றிக் கொண்டு வெளிப்படையாக பேச ஆரம்பித்துவிட்டனர். இதனாலேயே பிக்பாஸ் வீட்டில் தினம் தினம் பிரச்சனைகள் ஏற்படுகிறது.அதுமட்டுமல்லாமல், பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று பலர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இருந்தாலும், இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதுமட்டுமல்லாமல், நடிகர் விஜய் சேதுபதி, கமல்ஹாசன் போன்று தொகுத்து வழக்கவில்லையோ என்று பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனை நியாயப்படுத்தும் சம்பவங்கள் தான் தற்போது பிக்பாஸ் வீட்டில் அரங்கேறி வருகிறது.பிக்பாஸ் வீட்டில் தற்போது பல்வேறு விதமான பிரச்சனைகள் அரங்கேறி வருகிறது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் செய்யும் செயல்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. சமீபத்தில் துஷார், அரோராவை டேட்டிங் செய்ய கேட்டதாக அரோரா சொன்ன வீடியோ இணையத்தில் ட்ரெண்டானது. அதேபோன்று, துஷாருக்கு சக போட்டியாளர்கள் உதட்டில் முத்தம் கொடுத்த வீடியோவும் இணையத்தில் ட்ரெண்டானது. இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் தமிழ் பிக்பாஸை இந்தி பிக்பாஸ் மாதிரி மாத்திடாதீங்க என்று கமெண்ட் செய்து வந்தனர். அதுமட்டுமல்லாமல், இன்று நடிகர் விஜய் சேதுபதி போட்டியாளர்களை சந்திப்பார். அப்போது வீட்டில் நடக்கும் மற்ற பிரச்சனைகள் குறித்து பேசுவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இந்த வாரம் வெளியேறபோவது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.#Vikram saved diwakar illa na inneram soli mudeji irrukum 💯💯💯#BiggBossTamil9#BB9pic.twitter.com/HfDKevveyXஇந்நிலையில், தற்போது வாட்டர் மெலன் ஸ்டார் திவாருக்கு, விக்கல்ஸ் விக்ரம் அறிவுரை வழங்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது, கார்டன் ஏரியாவில் விக்ரம், திவாகர், பார்வதி, கம்ருதீன் ஆகியோர் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது திவாகர் நம்ம சின்னதா எதாவது பேசுனா கூட அது பெரிதாக்கி விட்டுவிடுகிறார்கள். காதல் திருமணம் பற்றி கேட்டார்கள் நான் பொதுவாக தான் கூறினேன் என்றார். அதற்கு விக்ரம், அண்ணே பேசாத 105 நாளைக்கு பேசாத உன் நல்லதுக்கு சொல்றேன். அது பொது கிடையாது. பத்திகிட்டு எரியும் விட்டுரு என்கிறார். இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
