Connect with us

பொழுதுபோக்கு

அர்ஜுன் தோள்பட்டையை பதம் பார்த்த அரிவாள்… அவர் சொன்ன அந்த வார்த்தை; கண்கலங்கிய விதார்த்

Published

on

arjun

Loading

அர்ஜுன் தோள்பட்டையை பதம் பார்த்த அரிவாள்… அவர் சொன்ன அந்த வார்த்தை; கண்கலங்கிய விதார்த்

நடிகர் விதார்த் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு நடிகர். மாதவன் நடித்த ‘மின்னலே’ திரைப்படத்தில் ஒரு சின்னக் கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்த இவரது திரைப்பயணம், கஷ்டங்களும் நிராசைகளும் நிறைந்த நீண்ட பயணமாகும். விக்ரம், விஜய்சேதுபதி போன்ற நடிகர்களைப் போலவே, விதார்த்தும் பல தடைகளையும் போராட்டங்களையும் கடந்து முன்னேறியவர். நடிகர் விதார்த், ‘மௌனம் பேசியதே’, ‘ஸ்டூடென்ட் நம்பர் ஒன்’, ‘சண்டக்கோழி’, ‘கொக்கி’, ‘திருப்பதி’, ‘லீ’, ‘பரட்டை’என்கிற அழகு சுந்தரம்’, ‘குருவி’, ‘ராமன் தேடிய சீதை’, ‘திருவண்ணாமலை’, ‘லாடம்’ எனப் பல படங்களில் அடையாளமே தெரியாத துணை நடிகராகவும், கூட்டத்தில் ஒருவராகவும் நடித்திருக்கிறார்.இப்படி படிப்படியாக முன்னேறி தற்போது நடிகராக பிரபலமாகியுள்ளார் விதார்த். இவர் நடிப்பில் சமீபத்தில் ‘மருதம்’ திரைப்படம் வெளியானது. இந்நிலையில், நடிகர் விதார்த், அர்ஜுனுக்கு தன்னால் ஏற்பட்ட காயம் குறித்து மனம் திறந்துள்ளார். அவர் பேசியதாவது, “திருவண்ணாமலை படத்தின் ஒரு காட்சியில் அர்ஜுன் சாரை நான் அருவாளால் வெட்ட போக வேண்டும். என் அண்ணாக சாய் குமார் நடித்திருந்தார். அவர் என் கைகளை பிடிக்க வேண்டும் இதுதான் காட்சி. எனக்கு முதலில் டம்பி அருவாள் கொடுத்திருந்தார்கள். இயக்குநர் பேரரசு டம்மி அருவாள் கொடுத்தார். ரெயின் எஃபெக்ட் போட்டுவிட்டார்கள். அப்போது, மாஸ்டர் அனல் அரசு டம்மி அருவாள் போதும் என்று டம்மியை கொடுத்தார். மறுபடி இயக்குநர் பேரரசு உண்மையான் அருவாளை கொடுத்தார். இப்படி மூன்று தடவை அருவாள் மாறியது. மூன்றாவது தடவை உண்மையான அருவாள் என் கைக்கு வந்துவிட்டது. நான் நடந்து வந்து அருவாள் எடுத்து அர்ஜுனை வெட்ட போக வேண்டும். சாய் குமார் அதை பிடிக்க வேண்டும். அப்போது அருவாளை எடுத்து வெட்டப்போகும் போது சாய்குமார், அருவாளை பிடித்தார் இருந்தாலும் அருவாள், அர்ஜுன் தோளில் வெட்டிவிட்டது.இதை பார்த்து இயக்குநர் பேரரசு பயந்துவிட்டார். என்னப்பா நீ இப்படி பண்ணிவிட்டாய் என்று என்னிடம் கேட்டார். அதன்பிறகு, அருவாளை எப்படி பிடிக்க வேண்டும் என்று அர்ஜுன் சொல்லி கொடுத்தார். தெரியாமல் எதையும் செய்யாதே. யார் என்ன சொன்னாலும் உண்மையான அருவாள் எடுக்காதே என்று சொன்னார்.A post shared by Wow Tamizhaa (@wowtamofficial)சாய்குமார் சென்று பார்த்தபோது அருவாள், அர்ஜுன் தோள்பட்டையில் ஆழத்தில் வெட்டியிருந்தது. அர்ஜுன் சார், சாய் குமாரிடம் இதை எல்லாம் பொய் சொல்லாதே. புது பையன் திட்டுவார்கள் என்று கூறியுள்ளார். இதை சாய்குமார் என்னிடம் சொன்னார். நான் அடுத்த நாள் அர்ஜுன் சாரை சென்று பார்த்தேன். அவரை பார்த்ததும் என் கண்கள் கலங்கிவிட்டது. அப்போது இருந்து அர்ஜுன் சார் மீது மிகுந்த மரியாதை வந்துவிட்டது” என்றார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன