Connect with us

இலங்கை

இஷாரா செவ்வந்தி விவகாரம்; நாங்க வேற மாதிரி….பொலிசாரை ஏமாற்றிய ஜனாதிபதி அநுர!

Published

on

Loading

இஷாரா செவ்வந்தி விவகாரம்; நாங்க வேற மாதிரி….பொலிசாரை ஏமாற்றிய ஜனாதிபதி அநுர!

   கொழும்பு – அளுத்கடை நீதிமன்றத்துக்குள் பாதாளக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி விவகாரத்தில் மிக இரகசியமான நடவடிக்கையொன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உத்தரவுக்கமைய இரகசியமாக பொலிஸ் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஷாரா செவ்வந்தியைக் கைது செய்வதற்காகப் பொலிஸ் அதிகாரி நேபாளத்துக்குச் செல்வதற்கு முன்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

செவ்வந்தி நேபாளத்தில் இருக்கின்றார் என்ற விடயத்தை பொலிஸார் அறிந்த பின்னர், அவருடைய ஒவ்வொரு நகர்வுகளையும் நுட்பமாக அவதானித்து வந்துள்ளனர்.

இதையடுத்து, செவ்வந்தியைக் கைது செய்வதற்காக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான ரொஹான் ஒலுகல நேபாளத்துக்குச் செல்வார் என்று தீர்மானிக்கப்பட்டது.

இந்த விடயம் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டால், பொலிஸ் திணைக்களத்துக்குள் இருக்கும் பாதாளக் குழுக்களின் உளவாளிகள், தகவல்களை வழங்கிவிடுவார்கள் என்பதால் மிக இரகசியமான திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

இதன்படி, தனக்கு வைரஸ் காய்ச்சல் என்ற தோற்றப்பாட்டை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ரொஹான் ஒலுகல ஏற்படுத்தியுள்ளார். ஆதலால், விடுப்பில் இருந்து சிகிச்சை பெறுவதைப்போன்று அனைவரையும் நம்பவைத்துள்ளார்.

இதைத் தொடர்ந்தே, அவர் நேபாளத்துக்குச் சென்றுள்ளார். நேபாளத்துக்குச் சென்ற பின்னரும், அவருடைய திறன்பேசிகள் உள்நாட்டில் இயங்கு நிலையில் இருந்துள்ளன. உச்சக்கட்ட அவதானத்துடன் இந்தத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

இதைத் தொடர்ந்தே செவ்வந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

கொழும்பு – அளுத்கடை நீதிமன்றத்துக்குள் பாதாளக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர், மத்துகம பகுதிக்குச் சென்ற செவ்வந்தி தனது முடியைக் கட்டையாக வெட்டிக்கொண்டு, ஆள் அடையாளத்தையும் மாற்றியுள்ளார்.

சுபுன் என்பவரே அவரை காரில் யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அதன் பின்னரே   படகு மூலம் இந்தியா சென்று இந்தியாவில் இருந்து ரயில் மூலமே செவ்வந்தி நேபாளம் சென்றுள்ளனர்.

அங்கு தலைமறைவாகி இருந்தபோதே இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு  விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை மை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

இக்ஷாரா செவ்வந்தி மண்ணுக்குள் புதைத்த கையடக்க தொலைபேசி மீட்பு

இந்தியாவிற்கு தப்பி சென்ற விதம் ; இஷாரா செவ்வந்தி வழங்கிய பரபரப்பு வாக்குமூலம்

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன