இலங்கை
எல்ல 9 வளைவு பாலத்தில் இந்திய சுற்றுலாப் பயணிக்கு காத்திருந்த அதிர்ச்சி
எல்ல 9 வளைவு பாலத்தில் இந்திய சுற்றுலாப் பயணிக்கு காத்திருந்த அதிர்ச்சி
எல்ல 9 வளைவு பாலத்தை பார்வையிடச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவர் ரயிலில் மோதி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (17) காலை 11.05 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் இந்தியாவைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவரே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த சுற்றுலாப் பயணி தெமோதரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
