பொழுதுபோக்கு
டியூட் vs பைசன்: தீபாவளி வின்னர் யார்? முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் பாருங்க!
டியூட் vs பைசன்: தீபாவளி வின்னர் யார்? முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் பாருங்க!
அக்.20-ம் தேதி திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. வழக்கமாக தீபாவளிக்கு பட்டாசு வெடிகளின் சந்தோஷம் ஒருபுறம் என்றால், மறுபுறம் புது பட ரிலீஸ்களின் மகிழ்ச்சி. அந்த வகையில் இந்த ஆண்டு உச்ச நட்சத்திர நடிகர்களின் படங்கள் எதுவும் திரைக்கு வரவில்லை. மாறாக இளம் நடிகர்களே இந்த ஆண்டு தீபாவளியில் மோதுகின்றன. தீபாவளியை முன்னிட்டு வெளியான 3 படங்களில் எந்த படம் பாக்ஸ் ஆஃபீஸ் வசூலில் முதல் நாள் ஸ்கோர் செய்துள்ளது என்பது குறித்து பார்ப்போம்.தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படங்களின் வசூல் குறித்த தகவல்களில் பிரதீப் ரங்கநாதனின் டியூட் படம் முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாட்டில் நேற்று (அக்.17) பைசன் காளமாடன், டியூட், டீசல் ஆகிய திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, சரத்குமார் நடிப்பில் டியூட் படம் உருவாகியுள்ளது. இது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் வெளியானது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், பசுபதி நடிப்பில் பைசன் காளமாடன் உருவாகியுள்ளது. சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் டீசல் படம் உருவாகியுள்ளது. இந்த 3 படங்களில் டியூட் படம் முன்னிலை வகிப்பதாக வசூல் நிலவரங்கள் தெரிவிக்கின்றன.மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் நேற்று (அக்.17) திரையரங்குகளில் வெளியான படம் ‘பைசன்’. அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், லால், அமீர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் படத்தை தயாரித்துள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன்படி முதல் நாளில் இந்தப் படம் ரூ.2.50 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் பட்ஜெட் ரூ.30 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவான படம் ‘டியூட்’. இந்தப் படத்தில் மலையாள நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்துள்ளார். சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமூக கருத்தை அடிப்படையாக கொண்டு ஜாலியான படமாக உருவாகியுள்ள ‘டியூட்’ படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் காமெடி காட்சிகள் நன்றாக இருப்பதாக சிலர் கூறுகின்றனர். காமெடி பெரிய அளவில் கைகொடுக்கவில்லை என்ற விமர்சனத்தையும் சிலர் முன் வைக்கின்றனர். இதுவரை டியூட் படம் ரூ.22 கோடி வரை வசூலித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.இந்த தீபாவளிக்கு வெளியான 3வது படம் ‘டீசல்’. ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள இந்தப் படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். அதுல்யா ரவி நாயகியாக நடித்துள்ளார். வினய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திபு நினன் தாமஸ் படத்துக்கு இசையமைத்துள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவானதாக கூறப்படும் இந்தப் படம் முதல் நாள் ரூ.40 லட்சம் வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.தீபாவளிக்கு வெளியான படங்களில் பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ படம் வசூலில் முன்னேறி வருகிறது. அடுத்த இடத்தில் ‘பைசன் காளமாடன்’ விமர்சன ரீதியாக ரசிகர்களிடையே பாராட்டை பெற்று வருகிறது. அடுத்தடுத்த நாட்கள் விடுமுறை நாட்களாக இருப்பதால் படங்களில் வசூல் எண்ணிக்கை கூடும் என தெரிகிறது. பிரதீப் ரங்கநாதன் தொடர்ச்சியாக நல்ல பொழுதுபோக்கு படங்களை அளித்து வருகிறார். லவ் டுடே, டிராகன், டியூட் என ஹாட்ரிக் வெற்றி பெற்றதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இந்த தீபாவளிக்கு மிகப்பெரிய நாயகர்களின் யாருடைய படங்களும் வெளியாகாதது குறிப்பிடத்தக்கது.
