பொழுதுபோக்கு
யோவ் நல்ல டியூன் போட்டு கொடுத்த ஏன்யா இப்படி பண்ற… மூத்த இயக்குனரை கேட்ட இளையராஜா: வாலி பாடலை திருத்திய சம்பவம்!
யோவ் நல்ல டியூன் போட்டு கொடுத்த ஏன்யா இப்படி பண்ற… மூத்த இயக்குனரை கேட்ட இளையராஜா: வாலி பாடலை திருத்திய சம்பவம்!
பழைய பாடல்கள் இன்றைய திரைப்படங்களில் பயன்படுத்துவது ஒரு வயைில் ட்ரெண்டிங்காக இருந்தாலும், இணையதளஙகளில் பழைய பாடல்களை ரசிகர்களும் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். அந்த வகையில், 90ஸ் கிட்ஸ்களில் ஃபேவரெட் பாடல்களில் ஒன்றாக இருக்கும் ஒரு பாடல் உருவான விதம் குறித்து படத்தின் ஹீரோ கூறியுள்ளார். கடந்த 1994-ம் ஆண்டு பி.எஸ்.நிவாஸ இயக்கத்தில் வெளியான படம் செவ்வந்தி. சந்தன பாண்டியன் – ஸ்ரீஜா இணைந்து நடித்த இந்த படத்தில், ஜனகராஜ், சரண்ராஜ், வென்னிற ஆடை மூர்த்தி, மீசை முருகேசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இயைராஜா இசையமைக்க, வாலி, முத்துலிங்கம், பிரசூடன் உள்ளிடடோர் பாடல்கள் எழுதியிருந்தனர். படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இந்த படத்தில் இணைந்து நடித்த சந்தன பாண்டியன் – ஸ்ரீஜா இருவரும் வாழ்க்கையில் ஒன்றாக இணைந்துள்ளனர். இதனிடையே இவர்கள் இருவரும், அவள் விகடன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் செவ்வந்தி படத்தில் இடம்பெற்ற முக்கிய பாடலான செம்மீனே செம்மீனே பாடல் உருவான விதம் குறித்து பேசியுள்ளார். இந்த பாடல் தற்போது டூயட் பாடலாக இருக்கிறது. இந்த டியூன் தான் இளையராஜா கொடுத்துள்ளார். முதலில் இது டூயட்டாக எழுதப்பட்ட பாடல் தான். பாடலை கவிஞர் வாலி எழுதி முடித்துள்ளார். அதன்பிறகு ஒரு வருடம், இயக்குனர் பி.எஸ்.நிவாஸ் கதையில் மாற்றம் செய்துள்ளார். அதன்படி, இந்த பாடல் டூயட் வேண்டாம். ஆண் மட்டும் பாடுவது போன்று இருக்கட்டும் என்று முடிவு செய்து. கவிஞர் வாலியிடம் சொல்லி பாடல் வரிகளை மாற்றியுள்ளார் இயக்குனர் நிவாஸ். பாடல் பதிவுக்கு வரும்போது அதை பார்த்த இளையராஜா என்னயா இது, டூயட் பாடல் தானே, ஏன் ஆண் மட்டும் பாடுவது போல் இருக்கிறது என்ற கேட்க, கதையில் மாற்றம் செய்துவிட்டதாக இயக்குனர் நிவாஸ் கூறியுள்ளார். இதை கேட்டு கோபமான இளையராஜா, யோவ் நல்ல டியூன் போட்டு கொடுத்த இப்படி பண்றீயே, ஏன்யா என்று கேட்டு, இந்த பாட்டு டூயட்டா இருந்தா தான் நல்லாருக்கும். என்ற சொல்லி அவரு பாடல் வரிகளை திருத்தி, ஆண், பெண் இருவரும் பாடுவது போல் மாற்றி அமைத்துள்ளார். இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடததை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
