இலங்கை
றீச்சா சுற்றுலாதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரங்கராட்டினம்!
றீச்சா சுற்றுலாதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரங்கராட்டினம்!
கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல வசதிகளுடனும் சுற்றுலா அம்சங்களைக் கொண்டுள்ளது.
பொழுதுபோக்கு மையமாக கருதப்படும் றீச்சா சுற்றுலாத் தளத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தமது பொழுதை களிக்க பல புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், சுற்றுலாப் பயணிகளை மேலும் கவரும் நோக்கில் புதிய பொழுதுபோக்கு அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழர் பகுதியில் முதல் தடவையாக றீச்சா சுற்றுலாத் தளத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுற்றுலாப் பயணிகளுக்காக ரங்கராட்டின பொழுதுபோக்கு இன்று18ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
