இலங்கை
சட்டவிரோத மணல் கடத்தல் ; பொலிஸாரின் அதிரடி சோதனை
சட்டவிரோத மணல் கடத்தல் ; பொலிஸாரின் அதிரடி சோதனை
திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவில் மணல் ஏற்றிக்கொண்டு பயணித்த உழவு இயந்திரம் ஒன்று நேற்று மாலை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மணல் அகழ்வு அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி மணல் ஏற்றிக் கொண்டு சென்ற குறித்த உழவு இயந்திரத்தை கந்தளாய் பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸார் வழிமறித்து கைப்பற்றியுள்ளனர்.
தற்போது குறித்த உழவு இயந்திரம் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
