Connect with us

சினிமா

டேய் யார்டா பாலு.? சாய்ராம் கல்லூரி நிறுவனரை அசிங்கப்படுத்திய பிரியங்காவின் வீடியோ வைரல்

Published

on

Loading

டேய் யார்டா பாலு.? சாய்ராம் கல்லூரி நிறுவனரை அசிங்கப்படுத்திய பிரியங்காவின் வீடியோ வைரல்

தமிழ்நாட்டில்  பிரபலமான கல்லூரிகளில் சாய்ராம் கல்லூரி ஒன்றாக திகழ்ந்து வருகின்றது.  கடந்த சில காலமாகவே அந்த கல்லூரியில் திரைப்படங்களின்ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நடைபெற்று வருகின்றன. இதற்கு  அமீர், சசிகுமார் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல வருடங்களாக செயல்பட்டு வரும் சாய்ராம் கல்லூரியில் ஏராளமான மாணவர்களும், மாணவிகளும் படித்து வருகின்றார்கள்.  இந்த காலேஜில் படிப்பதை கௌரவமாகவும் கருதுகின்றனர். தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் ஆன விஜய் நடித்த லியோ படத்தின் ஆடியோ ரிலீஸ்  இந்த காலேஜில் தான் நடந்துள்ளது.  இவ்வாறு பல நடிகர்களின் படங்களின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட்கள் கூட  சாய்ராம் கல்லூரியில் நடந்து கொண்டிருக்கின்றன.  இதனால்  மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இந்த நிலையில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டியூட் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் சாய்ராம் கல்லூரியில் நடைபெற்ற போது அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிரியங்கா, இந்த கல்லூரியின் டியூட் யார் என்று கேட்க, அங்கிருந்த மாணவர்கள் பாலு… பாலு.. என்று கத்தி கூச்சலிட்டுள்ளனர். இதனால் எதையும் யோசிக்காத பிரியங்கா டேய் பாலு… எங்கடா இருக்க.. யார்ரா அந்த பாலு.. என்று கேட்டு கத்தியுள்ளார். அதற்குப் பின்பு தான்  பாலு என்பவர் சாய்ராம் கல்லூரி நிறுவனர் என்று பிரியங்காவுக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தவர் பாலு சார்.. சாய்ராம் கல்லூரி நிறுவனரா? என்று  அப்படியே பம்மி அடங்கிவிட்டார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் தீயாகப் பரவி வருகின்றது.  இதை பகிர்ந்த பலரும் இதற்குத்தான் சினிமா நிகழ்ச்சியை கல்லூரியில் நடத்தக்கூடாது, இந்த அவமானம் கல்லூரியின் நிறுவனருக்கு தேவையா? என்று பல கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். இதை பகிர்ந்த ப்ளூ சட்டை மாறனும்,  கல்லூரிகளில் சினிமா ப்ரோமோஷன் தொடர்ந்து அனுமதித்து வந்தால் முதலாளியும் இப்படித்தான் அவமானப்பட வேண்டும்..  சாய்ராம் கல்லூரி இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த அடிக்கடி இடம் தருகின்றது.. அதற்கான அவப்பெயரையும் தற்போது பெற்றுவிட்டது  என்று  குறிப்பிட்டுள்ளார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன