Connect with us

பொழுதுபோக்கு

ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட்… சீட் நுனியில் அமர வைக்கும் மிராஜ்; இந்த ஓ.டி.டி-யில் பாருங்க!

Published

on

miraj

Loading

ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட்… சீட் நுனியில் அமர வைக்கும் மிராஜ்; இந்த ஓ.டி.டி-யில் பாருங்க!

‘த்ரிஷ்யம்’ பட இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘மிராஜ்’.  இந்த படத்தில் அசிஃப் அலி மற்றும் அபர்ணா பாலமுரளி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை என்று கூறப்படுகிறது.விமர்சனம்கிரண் என்பவர் தன் கம்பெனியின் டேட்டாவை திருடிக் கொண்டு ரயிலில் தப்பித்துச் செல்லும் பொழுது விபத்தில் இறக்கிறார். கிரண் டேட்டாவை திருடிக் கொண்டு சென்ற சம்பவத்தை அறிந்த அந்த கம்பெனியும், அடியாளும், போலீஸும் கிரணின் காதலி அபர்ணா பாலமுரளியை துரத்துகின்றனர். இந்த நேரத்தில் யூடியூப் சேனல் வைத்து நடத்தும் கதாநாயகன் ஆசிப் அலி, அபர்ணா பாலமுரளியை தொடர்பு கொண்டு அந்த டேட்டா அடங்கிய பென் டிரைவ் எங்கே என கேட்டு அதனை தேடிச் செல்கிறார். ஆசிப் அலிக்கு அவர் தேடி சென்ற பென் டிரைவ் கிடைத்ததா? அபர்ணா பாலமுரளி என்ன ஆனார்? என்பதே படத்தில் மீதிக்கதை.பொதுவாக ‘த்ரிஷ்யம்’ படம் பார்த்தவர்கள் ஜீத்து ஜோசப் இயக்கத்திற்கு அடிமையாகிவிடுவார்கள். படத்தில் ட்விஸ்ட் வேண்டும் என்பவர்கள் ஜீத்து ஜோசப் படத்தை பார்க்க செல்வார்கள். ஆனால், ட்விஸ்டே படமாக உருவெடுத்திருப்பது தான் ‘மிராஜ்’ திரைப்படம்.ஒரு பக்கம் போலீஸ், இன்னொரு பக்கம் அடியாட்கள் என நடிகை அபர்ணாவை துரத்த. அவர் பரிதவிப்பதை பார்க்கும் பொழுது நமக்கும் பரிதவிப்பு ஏற்படுகிறது. படத்தில் பெரும்பாலான காட்சிகள் தமிழில் வருவதால் தமிழ் ரசிகர்களும் இந்த படத்தை விரும்பி பார்ப்பார்கள். ஒவ்வொரு காட்சியும் நம்மால் யூகிக்க முடியாத காட்சிகளாகவே உள்ளது.படத்தின் நாயகன் ஆசிப் குணச்சித்திர நடிகர் போன்று காட்டிவிட்டு அதில் ஒரு ட்விஸ்டை வைத்திருப்பது அபாரம். படத்தின் ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் படத்திற்கு வலு சேர்த்துள்ளது. காட்சிக்கு காட்சி டுவிஸ்ட் என்பது சுவாரஸ்யம் என்றாலும், அதுவே ஒரு கட்டத்திற்கு மேல் போதும்பா என சொல்லும் நிலை உள்ளது. ஓ.டி.டி ரிலீஸ்இந்நிலையில், ‘மிராஜ்’ படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதலில் இப்படம் அக்டோபர் 20-ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒருநாள் முன்னதாகவே இன்று ஸ்ட்ரீமாகியுள்ளதாக கூறப்படுகிறது.  இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் ஓ.டி.டி-யில் வெளியாகியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன