தொழில்நுட்பம்
தீபாவளி பம்பர் ஆபர்: 7,000mAh பேட்டரி, 50MP கேமரா… வெறும் ரூ.679 இ.எம்.ஐ-யில் ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன்!
தீபாவளி பம்பர் ஆபர்: 7,000mAh பேட்டரி, 50MP கேமரா… வெறும் ரூ.679 இ.எம்.ஐ-யில் ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன்!
அண்மையில், வெளியாகி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போன், அமேசானின் அதிரடியான தீபாவளி தமாக்கா சேலில் தற்போது மிகக்குறைந்த விலையில் கிடைக்கிறது. குறிப்பாக, இந்த போன் அதன் வெளியீட்டு விலையில் இருந்து ரூ.3,000 குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மலைக்க வைக்கும் 7,000mAh திறன் கொண்ட பேட்டரி இந்த போனின் மிகப்பெரிய சிறப்பம்சமாகும். மேலும், இந்தப் போனை வாங்குபவர்களுக்கு வட்டி இல்லா தவணை (No-Cost EMI) மற்றும் பழைய போன் எக்ஸ்சேஞ் சிறப்புச் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.ரெட்மி 15 5ஜி பேட்டரியில் உள்ள புதுமை பலரையும் கவர்ந்துள்ளது. இது, எலெக்ட்ரிக் வாகனங்களில் (EV) பயன்படுத்தப்படும் தரத்தில் உள்ள சிலிக்கான்-கார்பன் பேட்டரி தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இந்த அதிநவீன பேட்டரி, மாபெரும் திறன் கொண்ட பின்னரும், போனின் ஒட்டுமொத்த தடிமன் (Thickness) குறைய உதவுகிறது. முக்கிய ஹார்டுவேர் அம்சங்களைப் பொருத்தவரை, இது 50MP முதன்மை கேமரா மற்றும் அதிகபட்சமாக 8GB ரேம் வசதியுடன் வருகிறது. ரெட்மி 15 5ஜி 3 ஸ்டோரேஜ் விருப்ப வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த கவர்ச்சிகரமான ஸ்மார்ட்போன் சாண்டி பர்ப்பிள், ஃப்ராஸ்ட் ஒயிட் மற்றும் மிட்நைட் பிளாக் ஆகிய 3 வண்ணங்களில் அமேசான் மற்றும் ரெட்மியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கிறது. மேலும், இந்த போனை வெறும் ரூ.679-ல் இருந்து தொடங்கும் இ.எம்.ஐ. தவணை முறையில் எளிதாக வாங்கலாம்.ரெட்மி 15 5ஜி முக்கிய அம்சங்கள்6.9-இன்ச் FHD+ திரை இதில் 144Hz ஹை ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் டால்பி விஷன் ஆதரவு உள்ளது. சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 6s Gen 3 5G ஆஃப் மூலம் இயங்குகிறது. லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 15-ஐ அடிப்படையாக கொண்ட ஹைப்பர்ஓஎஸ் இதில் உள்ளது. 7,000mAh பேட்டரியுடன், 33W USB Type-C ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. அதிகபட்சம் 8GB ரேம்+256GB ஸ்டோரேஜ் வரை உள்ளது. சேமிப்பு மற்றும் ரேம் இரண்டையுமே விரிவாக்கம் செய்ய முடியும். பின்னால் 50MP மெயின் கேமரா கொண்ட டூயல் கேமரா அமைப்பு, முன்புறம் 8MP செல்ஃபி கேமரா. சமீபத்திய செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
