இலங்கை
யாழ். போதனா வைத்தியசாலையின் 175 ஆண்டு நிறைவு : முத்திரை வெளியீடும் உப தபால் அலுவலகம் திறப்பு விழாவும்!
யாழ். போதனா வைத்தியசாலையின் 175 ஆண்டு நிறைவு : முத்திரை வெளியீடும் உப தபால் அலுவலகம் திறப்பு விழாவும்!
நேற்றைய தினம் யாழ் போதனா வைத்தியசாலையின் 175 ஆண்டு நிறைவையொட்டி முத்திரை வெளியீடும் ,உப தபால் அலுவலுக திறப்பு விழாவும் விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் தென்னிந்திய திருச்சபை முன்னாள் பேராயர் வணக்கத்துக்குரிய எஸ் ஜெபநேசன் அடிகளாரும், தெல்லிப்பளை ஸ்ரீதுர்க்கா தேவி தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்களும் மற்றும் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் ,சன்முகநாதன் ஸ்ரீபவானத்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி ரஜிவன் ஆகியவர்களும் யாழ் மாவட்ட அரச அதிபர் திரு ம.பிரதிபன் மற்றும் Deputy Postmaster General Operation ,Deputy Postmaster General Northern Province ,Director Philatelic Bureau, Publicity Officer Philatelic Bureau Sri Lanka Post ,Divisional Superintendent Postal Department, இவர்களுடன் வைத்தியநிபுணர்கள் வைத்தியர்கள் தாதியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
