Connect with us

இலங்கை

அனைவரின் சுதந்திரமும் கண்ணியமும் பாதுகாக்கப்படும்! தீபாவளியில் உறுதி பூண்டுள்ளோம்:ஜனாதிபதி வாழ்த்துச் செய்தியில்

Published

on

Loading

அனைவரின் சுதந்திரமும் கண்ணியமும் பாதுகாக்கப்படும்! தீபாவளியில் உறுதி பூண்டுள்ளோம்:ஜனாதிபதி வாழ்த்துச் செய்தியில்

அனைவரும் தங்கள் அனைத்து சிவில் – அரசியல் – கலாசார உரிமைகளையும் தடையின்றி அனுபவிக்கக்கூடிய அனைவரின் சுதந்திரமும் கண்ணியமும் பாதுகாக்கப்படும் ஒரு பாதுகாப்பான நாட்டைக் கட்டியெழுப்பவும் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம் என்று தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 அந்த வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில்,

Advertisement

உலகெங்கிலும் வாழும் இந்து மக்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகின்றது.

கிருஷ்ண பகவான் நரகாசுரனை அழித்தமையை நினைவு கூர்ந்து, அதர்மத்தைத் தோற்கடித்து அநீதியை வென்றது போன்று அனைவரின் இதயங்களிலும் இருள் நீங்கி ஒளி பரவட்டும் என்ற பிரார்த்தனையை தாங்கி அவர்கள் மத அனுஷ்டானங்களில் ஈடுபடுகின்றனர்.

 இந்தக் கொண்டாட்டம் தீமைக்கு எதிராக நன்மை வெற்றி பெற்றதை குறிக்கின்றது. தற்போது நம் முன்பாக உள்ள பெரும் சவால் போன்றே நாட்டின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும் போதைப்பொருள், மறைந்துள்ள குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த அரசு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

Advertisement

 அனைவரினதும் வாழும் உரிமையை உறுதி செய்வதும் அதை ஒரு சிறந்த மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உரிமையாக மேம்படுத்துவதும் எங்கள் முயற்சிகளின் முக்கிய நோக்கமாகும்.

 அனைத்து மதவாத, இனவாத சக்திகளையும் தோற்கடித்து சமூக நீதியை நிலைநாட்டவும் அனைவரும் தங்கள் அனைத்து சிவில் – அரசியல் – கலாசார உரிமைகளையும் தடையின்றி அனுபவிக்கக்கூடிய அனைவரின் சுதந்திரமும் கண்ணியமும் பாதுகாக்கப்படும் ஒரு பாதுகாப்பான நாட்டைக் கட்டியெழுப்பவும் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம் என்பதை இதன் மூலம் வலியுறுத்துகின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

images/content-image/1754511373.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன