இலங்கை
கொழும்பில் 09 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
கொழும்பில் 09 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
கொழும்பு கிராண்ட்பாஸ் காவல் பிரிவுக்குட்பட்ட சிரிமுத்து உயன வீட்டுத் தொகுதிக்கு அருகில் நடத்தப்பட்ட சோதனையில் 09 கிலோகிராம் 555 கிராம் குஷ் போதைப்பொருளுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றப்பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இந்த சோதனை நடத்தப்பட்டது.
சந்தேக நபர் கொழும்பு 14 ஐச் சேர்ந்த 27 வயதுடையவர்.
இந்த சம்பவம் குறித்து கொழும்பு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
