பொழுதுபோக்கு
தீபாவளி கொண்டாட்டம்: குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்ந்த சமந்தா: லேட்டஸ்ட் போட்டோஸ்!
தீபாவளி கொண்டாட்டம்: குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்ந்த சமந்தா: லேட்டஸ்ட் போட்டோஸ்!
இந்தியா முழுவதும் தீபாவளி திருநாள் விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நடிகை சமந்தா குழந்தைகளுடன் இணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில், தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் புத்தாடை உடுத்தி, அக்கம்பக்கத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருடனும் இணைந்து பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடி வருவது வழக்கம். இந்த நாளுக்காக வெளியூரில் வேலை செய்யும் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருவதும், ஒரு மாதத்திற்கு முன்பே பட்டாசு, வாங்குவது புத்தாடை உடுத்துவது என மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருவார்கள். அந்த வகையில் இன்று உலகம் முழுவதும் உள்ள இந்திய மக்கள் தீபாவளி பண்டிகையை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நடிகை சமந்தா, அரசு சாரா நிறுவனத்துடன் இணைந்து குழந்தைகளுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளார். இது குறித்து புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமந்தா, என்ன ஒரு அழகான மாலை, சிரிப்பு, நன்றியுணர்வு மற்றும் ஒற்றுமையால் நிறைந்த ஒரு மாலை என்று பதிவிட்டுள்ளார். A post shared by Samantha (@samantharuthprabhuoffl)அதேபோல் நடிகை நயன்தாரா நாப்கின் விளம்பரம், கல்யாணி பிரியதர்ஷன் சாம்சங் ஸ்மார்ட்போன் விளம்பரம், ஐஸ்வர்யா ராஜேஷ் ஜூவலரி விளம்பரம் என பிரபலங்கள் பலரும் விளம்பரங்களை பதிவிட்டு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். நடிகை பிரியா பவானி சங்கர், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நடிகை சினேகா வெளியிட்டுள்ள பதிவில், இந்த பெரிய கொண்டாட்டத்திற்கு நாங்கள் தயாராகும் வேளையில், எனது அன்பான ரசிகர்கள் அனைவருக்கும் ஒளி, சிரிப்பு மற்றும் மகிழ்ச்சியை வாழ்த்துகிறேன். இந்த பண்டிகை காலம் உங்களுக்கு மகிழ்ச்சி, நல்ல அதிர்வுகள் மற்றும் உங்கள் அன்புக்குரியவர்களுடன் சிறப்பு தருணங்களைக் கொண்டுவரட்டும் என்று பதிவிட்டுள்ளார். சீரியல் நடிகை சுஜிதா தனுஷ் தனது புகைப்படங்களை வெளியிட்டு பாதுகாப்பாக தீபாவளி பண்டிகையை கொண்டாடுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
