பொழுதுபோக்கு
தெலுங்கில் ஹீரோயின், தமிழில் சின்ன கேரக்டர்; டியூட் படத்தில் நடித்த இந்த நடிகை யார் தெரியுமா?
தெலுங்கில் ஹீரோயின், தமிழில் சின்ன கேரக்டர்; டியூட் படத்தில் நடித்த இந்த நடிகை யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் 2 படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இணைந்துள்ள பிரதீப் ரங்கராதன், நடிப்பில் தீபாவளி வெளியீடாக வந்த டியூட் திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை ஒருவரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.ஜெயம்ரவி நடித்த கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கராதன். தொடர்ந்து லவ் டுடே படத்தின் மூலம் இயக்குனர் மற்றும் ஹீரோவாக அறிமுகமான இவர் அடுத்து அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ட்ராகன் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த இரு படங்களுமே இளைஞர்கள் மத்தியில் பிரதீப்க்கு பெரிய வரவேற்பை பெற்று கொடுத்த்து. அதன்பிறகு, இவர் நடிக்கும் படங்களுக்கு பெரிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டது.தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்.ஐ.கே படத்தில் நடித்துள்ள பிரதீப் கீர்த்தீஸ்வரன் என்ற புதுமுக இயக்குனர் இயக்கத்தில் டியூட் என்ற படத்திலும் நடித்திருந்தார், இந்த இரு படங்களுமே தீபாவளி தினத்தில் வெளியாக இருந்த நிலையில், கடைசி நேரத்தில், எல்.ஐ.கே திரைப்படம் விலகியதை தொடர்ந்து பைசன், டீசல் ஆகிய படங்களுடன் டியூட் படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு கடந்த அக்டோபர் 17-ந் தேதி வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.மலையாள நடிகை ம்மிதா பைஜூ நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் சரத்குமார், ரோஹினி, சலீம்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையில் வெளியான இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தில் மமிதா பைஜூவுடன் ஐஸ்வர்யா சர்மா சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த நடிகையின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது, ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஐஸ்வர்யா சர்மா தெலுங்கில் பல படங்களில் நாயகியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
