Connect with us

இலங்கை

மட்டன் குழம்பில் மாத்திரைகள்; தப்பிய கணவனை கொன்று நாடகமாடிய மனைவி

Published

on

Loading

மட்டன் குழம்பில் மாத்திரைகள்; தப்பிய கணவனை கொன்று நாடகமாடிய மனைவி

தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் சத்பகிரி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(35), டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் மவுனிகா(30). இருவரும் காதலித்து கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர்.

இவர்களுக்கு 2குழந்தைகள் உள்ளனர். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு மவுனிகா பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளார். அப்போது அஜய் என்ற வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதற்கிடையே சுரேஷ் பணத்திற்காக மவுனிகாவை அடிக்கடி துன்புறுத்தி வந்தாராம். இதனால் ஆத்திரமடைந்த மவுனிகா, கணவரை கொல்ல முடிவு செய்துள்ளார்.

சிலர் மூலம் 15 வயாகரா மாத்திரைகளை வாங்கி சில நாட்களுக்கு முன்பு மட்டன் குழம்பு சமைத்து அதில் கலந்து சுரேசுக்கு கொடுத்துள்ளார்.

ஆனால் வழக்கத்திற்கு மாறாக வாசனை இருந்ததால் சுரேஷ் சாப்பிடவில்லையாம்.

Advertisement

இந்த முயற்சி தோல்வி அடைந்ததால்  தூக்க மாத்திரைகளை அதிகளவு தூள் செய்து மதுவில் கலந்து கொடுத்துள்ளார். அதை குடித்த சுரேஷ் சிறிதுநேரத்தில் மயங்கியுள்ளார். உடனே மவுனிகா புடவையால் சுரேஷை தூக்குமாட்டி தொங்கவிட்டு கொலை செய்துள்ளார்.

பின்னர் சடலத்தை கீழே இறக்கி வைத்துவிட்டு, சுரேஷின் தாயாருக்கு போன் செய்து கணவர் திடீரென மயங்கி விழுந்துவிட்டார் என அழுதுள்ளார்.  சுரேஷின் தாயார் மற்றும் உறவினர் சம்பவ இடத்திற்கு சென்று சுரேஷை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து புகாரின்பேரில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மவுனிகா பலருடன் சேர்ந்து சுரேஷை கொன்றுவிட்டு மயங்கிவிழுந்து இறந்ததாக கூறி நாடகமாடியது தெரிய வந்தது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன