பொழுதுபோக்கு
மாணவர்களை தற்குறிகளாக மாற்றும் செயல்; டியூட் பட நிகழ்ச்சிக்கு எதிராக எஸ்.வி சேகர் கருத்து!
மாணவர்களை தற்குறிகளாக மாற்றும் செயல்; டியூட் பட நிகழ்ச்சிக்கு எதிராக எஸ்.வி சேகர் கருத்து!
பிரதீப் ரங்கராதன் நடிப்பில் வெளியாகியுள்ள டியூட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இந்த படத்தின் இசை வெளியீ்ட்டு விழாவில் கல்லூரி முதல்வர் குறித்து பிரியங்கா பேசிய கருத்துக்களை கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.தமிழ் சினிமாவில் 2 படங்கள் மட்டுமே நடித்து முன்னணி நடிகராக உயர்ந்துள்ள பிரதீப் ரங்கரநாதன் நடிப்பில் தயாராகியுள்ள படம் டியூட். மைதிரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை கீர்த்தீஸ்வரன் என்ற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ளார். மேலும் மமிதா பைஜு நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் சரத்குமார், ரோஹினி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். தீபாவளி தினத்தை முன்னிட்டு கடந்த அக்டோபர் 17-ந் தேதி இந்த படம் வெளியானது.பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கல்லூரி முதல்வர் குறித்து நடந்த சர்ச்கைள் தொடர்பாக பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிரியங்காவை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இது போன்ற சினிமா நிகழ்ச்சிகளை கல்லூரிகளில் நடந்த அனுமதி கொடுத்தது குறித்து தமிழக அரசையும் கல்லூரி நிர்வாகத்தையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்,தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, டியூட் விழாவுக்கு வந்த மாணவர்களை பார்த்து இந்த காலேஜின் டியூட் பையன் யாருப்பா என்று கேட்க, அதற்கு மாணவர்கள், பாலு பாலு என்று கத்துகின்றனர். இதையடுத்து ப்ரியங்கா பாலு, ஏய் பாலு, எங்கடா இருக்க பாலு, காலேஜில் பாலு யாருடா, பாலு டியூட் என்று ப்ரியங்கா மீண்டும் கத்தினார். அதன் பிறகே சாய் ராம் நிறுவனர் பாலு சாரை தான் பாலு பாலுனு சொன்னீங்களா என்று ப்ரியங்கா கேட்கிறார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து டியூட் பட விழாவை நடத்த அனுமதி கொடுத்ததற்கு ப்ரியங்காவால் என்ன முடியுமோ அதை செய்துவிட்டார் என்று விமர்சித்து வருகின்றனர். மேலும், இதுபோன்ற சினிமா விழாவை கல்லூரிகளில் நடந்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.அடுத்த தலைமுறை மாணவர்களை திசை திருப்பக்கூடிய தற்குறிகளாக மாற்றும் இப்படிப்பட்ட சினிமா நிகழ்ச்சிகளை கல்வித்துறை தடை செய்ய வேண்டும்.@CMOTamilnadu@Udhaystalin@Anbil_Maheshhttps://t.co/hr2kzj9wyVஇதனிடையே இந்த வீடியோவை பகிர்ந்த பிரபல சினிமா விமர்சகர் புளுசட்டை மாறன், கல்லூரிகளில் சினிமா ப்ரமோஷன்களை தொடர்ந்து அனுமதித்து வந்தால்… அதன் முதலாளியும் இப்படி அவமானப்பட நேரும். சாய்ராம் கல்லூரி இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த அடிக்கடி இடம் தருகிறது. அதற்கான அவப்பெயரையும் இப்போது பெற்றுவிட்டது. கல்வியை விழுங்கும் சினிமா வெறி என்று பதிவிட்டுள்ளார்.இந்த பதிவை ரீபோஸ்ட் செய்துள்ள, நடிகர் எஸ்.வி.சேகர், அடுத்த தலைமுறை மாணவர்களை திசை திருப்பக்கூடிய தற்குறிகளாக மாற்றும் இப்படிப்பட்ட சினிமா நிகழ்ச்சிகளை கல்வித்துறை தடை செய்ய வேண்டும் என முதல்வர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோரை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.
