இலங்கை
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்றுமுதல் பலத்த மழை!
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்றுமுதல் பலத்த மழை!
வங்காள விரிகுடாவில் நாளைய தினம் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட தாழமுக்கம் இன்று உருவாகியுள்ளது. இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு அடுத்த சில நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இது நாளை இரவு அல்லது நாளை மறுநாள் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, தமிழ்நாட்டின் சென்னை அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத் தாழமுக்கம் நகரும்போது கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் கடற்பகுதிகளை அண்மித்தே நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கு மழை இன்று முதல் செறிவடைந்து 24 ஆம் திகதி வரை தொடரும்.
