இலங்கை
உருவானது தாழமுக்கம் வடக்கில் கனமழைக்கு வாய்ப்பு
உருவானது தாழமுக்கம் வடக்கில் கனமழைக்கு வாய்ப்பு
வங்காள விரிகுடாவில் முன்னறிவிக்கப்பட்டிருந்த தாழமுக்கம் நேற்று உருவாகியுள்ளது. இந்தத் தாழமுக்கம் இன்று இரவு அல்லது நாளை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுமையமாக மாற்றம்பெறும் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் உள்ளதாவது:-
வங்களா விரிகுடாவில் முன்னறிவிக்கப்பட்டிருந்த தாழமுக்கம் தற்போது உருவாகியுள்ளது. தற்போதை கணிப்புகளின் அடிப்படையில் அது தமிழ் நாட்டின் சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையின் கிழக்கே உருவாகியுள்ள தாழமுக்க நகர்வு காரணமாக வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு மிகக்கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாதிரிகளின் அடிப்படையில் யாழ். மாவட்டத்தின் பல பகுதிகள் (பிரதானமாக நகரப் பகுதி). முல்லைத்தீவு மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், மன்னார் மாவட்டம், மற்றும் வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளில் 80 தொடக்கம் 120 மில்லிமீற்றர் வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என்றுள்ளது.
