Connect with us

சினிமா

நடிகைக்கு அழகோ, நிறமோ முக்கியம் இல்ல.! அர்ப்பணிப்பே முக்கியம்.! மாரி செல்வராஜ் விளக்கம்

Published

on

Loading

நடிகைக்கு அழகோ, நிறமோ முக்கியம் இல்ல.! அர்ப்பணிப்பே முக்கியம்.! மாரி செல்வராஜ் விளக்கம்

சமூதாயம் சார்ந்த திரைப்படங்களை இயக்குவதில் தனித்துவம் பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜ், சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் அளித்த கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.அவரது வாக்கியங்கள் சாதாரணமானவை அல்ல. அவை, திரையுலகில் நடிகர் தேர்வு, தோற்றவியல், நிற அடிப்படை என்பவற்றால் வழிநடத்தப்படும் கதைகளின் மேல் கேள்வி எழுப்பும் வகையில் அமைந்துள்ளது.அந்தவகையில் நேர்காணலின் போது, “வெள்ளையாக இருக்கும் நடிகைகளுக்கு கருப்பு மேக் அப் போட்டு நடிக்க வைப்பது ஒரு சாய்ஸ் தான். அப்படி பார்த்தா ஒரு ஊனமுற்ற கதாபாத்திரத்தில் ஊனமுற்றவரை நடிக்க வைத்து துன்புறுத்த முடியுமா?” என்று கேட்டிருந்தார் மாரி செல்வராஜ். மேலும் அவர், ” நாங்க ஒருத்தர் வெள்ளையா இருக்காங்க அழகா இருக்காங்கன்னு தேர்வு செய்றது இல்ல. யாருக்கு அர்ப்பணிப்பு இருக்கோ.. யார் ஒரு கதைக்காக என்ன வேணும் என்றாலும் செய்ய தயாரா இருக்காங்களோ.! அவங்களைத் தான் சினிமாவிற்கு தேர்வு செய்கின்றோம்..” எனவும் தெரிவித்திருந்தார். மாரி செல்வராஜின் இந்தக் கருத்துகள், நடிகையின் தோற்றத்தின் மேல் வைத்திருக்கும் சினிமா உலகின் பல அபிமானங்களை கேள்விக்குள்ளாக்குகின்றன. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன