Connect with us

இலங்கை

விற்பனைக்கு வந்த முழு தங்கத்தாலான ‘சுவர்ண பிரசாதம்’ ; விலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க

Published

on

Loading

விற்பனைக்கு வந்த முழு தங்கத்தாலான ‘சுவர்ண பிரசாதம்’ ; விலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வரும் நிலையில் அது இலங்கை மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.

இவ்வாறானதொரு சூழலில் முழுமையாக தங்கத்திலான இனிப்பு வகை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா?

Advertisement

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு சுவீட்ஸ் கடையில் சாப்பிட கூடிய வகையில் தங்கத்தால் செய்யப்பட்ட சுவர்ண பிரசாதம் எனப்படும் விசேஷ இனிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முழுக்க, முழுக்க 24 கரட் உண்ணக்கூடிய தங்கத்தால் இந்த இனிப்பு தயார் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இனிப்பு தயாரிப்பில் உட்புறம் முழுவதும் 24 கரட் சுத்தமான, உண்ணக்கூடிய தங்க படலத்தால் மூடப்பட்டுள்ளது.

தங்கம் மட்டுமின்றி குங்குமப்பூ, பாதம், பிஸ்தா உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களால் இந்த இனிப்பு தயார் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இந்த இனிப்பை வாங்குபவர்களுக்கு மரத்தால் ஆன பெட்டியில் வைத்து அந்த இனிப்பு வழங்கப்பட்டு வருவதாக அந்த இனிப்பின் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

அதன் விலையை கேட்டால் தலையே சுற்றிவிடும் போல் உள்ளது.

தங்கம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களால் தயாரிக்கப்பட்ட இந்த சுவர்ண பிரசாதத்தின் விலை 1 இலட்சத்து 11 ஆயிரம் இந்திய ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதைத்தவிர, இந்த இனிப்பை விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்தில் 24 கரட் தங்கத்தால் தயாரிக்கப்பட்ட பிஸ்தா லோஞ்ச் (கிலோ ரூ.7,000), காஜு கட்லி (கிலோ ரூ.3,500) மற்றும் லட்டு (கிலோ ரூ.2,500) போன்ற பிற ஆடம்பர இனிப்புகளையும் விற்பனை செய்யப்படுகின்றது.

தீபாவளியை முன்னிட்டு செல்வந்தர்கள் மற்றும் உயர் பெருநிறுவனங்களின் பரிசளிக்கும் கலாசாரத்தில் ஒரு புதிய வரையறையை உருவாக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய இந்திய இனிப்புகளை, ஆரோக்கியம் மற்றும் ஆடம்பரத்துடன் இணைக்கும் ஒரு புதுமையான முயற்சியாக ‘சுவர்ண பிரசாதம்’ பார்க்கப்படுவதாக கூறப்படுகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன