இலங்கை
இஷாராவிடம் தீவிர விசாரணை; வெளியேவரும் புதிய தகவல்கள்
இஷாராவிடம் தீவிர விசாரணை; வெளியேவரும் புதிய தகவல்கள்
நேபாளத்தில் கைது செய்யப்பட்டு, நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்களிடம் தற்போது தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாள்களாக விசாரணைக்காக இஷாரா செவ்வந்தி அளுத்கம,தொடந்துவ. மித்தெனிய உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். அவர் நேற்றுமுன்தினம் கிளிநொச்சிப் பகுதிக்கு அழைத்துச்செல்லப்பட்டார் என்றும் கூறப்படுகின்றது.
அதேவேளை, இஷாராவுடன் கைது செய்யப்பட்ட தக்ஷி என்ற பெண்னை ஏமாற்றியே நேபாளத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. கெஹெல் பத்தர பத்மேவின் ஆலோசனைக்கு அமைய இஷாராவின் தோற்றத்தை ஒத்த யுவதி ஒருவரைத் தேடும்பணியில் சுரேஷ் என்பவர் ஈடுபட்டபோதே தக்ஷியை அவர்கள் சந்தித்துள்ளனர் என்று கூறப்படுகின்றது. தக்ஷிக்கு வெளிநாட்டுவேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறியே நேபாளம் அழைத்துச் சென்றுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
