Connect with us

இலங்கை

சத்திர கிசிச்சையில் வரலாற்றுச் சாதனை படைத்த நீர் கொழும்பு வைத்திய சாலை

Published

on

Loading

சத்திர கிசிச்சையில் வரலாற்றுச் சாதனை படைத்த நீர் கொழும்பு வைத்திய சாலை

   இலங்கையில் முதல் முறையாக செவிப்புலனற்றோர்களுக்கான சத்திர கிசிச்சையில் வரலாற்றுச் நீர்கொழும்பு வைத்தியசாலை சாதனை படைத்துள்ளது.

வைத்திய நிபுணர் ரிஸ்னி சக்காஃப் தலைமையில் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் முதன்முறையாக “என்டொஸ்கொபி யுஸ்ட்ச்ஷியன் டியுப் சேஜரி” (Endoscopic Eustachian Tube Surgery) வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

இந்த சத்திரசிகிச்சை மூலம் மூக்குத் துவாரத்தின் ஊடாக கமரா மற்றும் கருவிகள் செலுத்தி,
காதுக்குழியில் அடைந்துள்ள சலி, சீல் போன்றவை அகற்றப்படுகின்றன.

முன்னர் செய்யப்படும் முறைகளால் செவிப்பறை சேதமடைவதை இது தடுக்கின்றது.
சுமார் 30 நிமிடங்களில் முடியும் இந்த அறுவைச் சிகிச்சை, நினைவு இழக்காமல் வெளிநோயாளர் பிரிவிலும் செய்யக்கூடியது .

இந்த முயற்சிக்கு வைத்திய நிபுணர் ரிஸ்னி சக்காஃப், உதவி வைத்தியர்கள், தாதிகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் இணைந்து பணியாற்றினர்.

Advertisement

இதற்கு முன்பும் அவர் 2019ல் குளியாபிட்டிய வைத்தியசாலையில் தைரோய்டு சத்திரசிகிச்சை (Transoral Thyroidectomy) 2020ல் ஹோமாகம வைத்தியசாலையில் புற்றுநோய் கட்டி நீக்கம் (Ultrasound-guided surgery)
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 3D சத்திரசிகிச்சைஎன பல புதுமையான சிகிச்சைகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இவரது சேவைகளுக்காக ஜனாதிபதி விருதும் பெற்றுள்ளார்.

சத்திர சிகிச்சையின் பின்னர் வைத்திய நிபுணர் ரிஸ்னி சக்காப், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

Advertisement

காது கேட்காதவர்களுக்கான புதிய சத்திரசிகிச்சை முறையை நான் இன்று முதன் முதலாக இலங்கையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அறிமுகம் செய்துவைத்தேன்.
இதற்கு முன்பு காது கேற்காதவர்களுக்கு அவர்களின் காதில் அடைபட்டுள்ள சலி, சீல் போன்றவற்றை அகற்றுவதற்காக செவிப்பறையில் ஒரு துவாரத்தை இட்டு அதனூடாக அகற்றப்படுகின்றன.

இதனால் செவிப்பறை பழுதடைகின்றது.
இந்த புதிய முறையின் மூலம் மூக்குத் துவாரத்தின் ஊடாக கமராவை அனுப்பி காதுக்குழி குழாய் மூலம் சலி, சீல் என்பன அகற்றப்படுகின்றன.

இச் சத்திர சிகிச்சைக்கு சுமார் 30 நிமிடங்கள் எடுக்கும்.
இந்த சத்திர சிகிச்சை இலங்கைக்கு முதல் முறை என்றாலும் எனக்கு இது முதலாவது அல்ல. இதற்கு முன்பு நான் இங்கிலாந்து நாட்டில் இவ்வாறான பல சத்திர சிகிச்சைகள் செய்துள்ளேன்.

Advertisement

இச் சத்திர சிகிச்சையை சத்திர சிகிச்சை நிலையங்களில் அன்றி வெளி நோயாளர் பிரிவிலும் நினைவு மாற்றாமல் மறக்க வைப்பதன் மூலமும் செய்ய முடியும்.

இதன்மூலம் செலவுகளையும் நேரங்களையும் மிகுதப்படுத்த முடியும்.
நீர்கொழும்பு வைத்திய சலையில் இதனை அறிமுகம் செய்வதற்காக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் புஷ்பா கம்லத் எனக்கு பாரிய பங்களிப்பை செய்தார் என தெரிவித்துள்ளார்

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன