Connect with us

பொழுதுபோக்கு

‘டியூட்’ படத்துக்கு ரூ.15 கோடி சம்பளம்… கிளப்பி விட்ட நெட்டிசன்கள்; அதிர்ந்து போன மமிதா பைஜூ ஓபன் டாக்!

Published

on

mamitha

Loading

‘டியூட்’ படத்துக்கு ரூ.15 கோடி சம்பளம்… கிளப்பி விட்ட நெட்டிசன்கள்; அதிர்ந்து போன மமிதா பைஜூ ஓபன் டாக்!

தமிழ் திரையுலகில் பாலிவுட், மாலிவுட் நடிகைகளின் ஆதிக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழ் திரையுலகில் அதிகம் ஒலிக்கும் ஒரு பெயர் என்றால் அது நடிகை மமிதா பைஜு பெயர் தான். சிறுவயதில் திரைத்துரையில் அறிமுகமான மமிதா பைஜு ‘சூப்பர் சரண்யா’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றார். இவர் நடித்த ‘பிரேமலு’ திரைப்படம் மக்கள் மத்தியில் மைதா பைஜுவிற்கு என்று ஒரு தனி இடத்தை ஒதுக்கியது. அதுமட்டுமல்லாமல், ‘பிரேமலு’ திரைப்படம் மமிதா பைஜுவின் சினிமா கேரியரை புரட்டிப்போட்டது.நடிகை மமிதா பைஜு தற்போது அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் வெளியான ‘டியூட்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன் நடித்திருந்தார். மேலும்,ச் சரத்குமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ‘டியூட்’ திரைப்படம் கடந்த 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் வெளியான ஐந்து நாட்களில் ரூ.95 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.இந்நிலையில், நடிகை மமிதா பைஜு ’டியூட்’ படத்தில் வாங்கிய சம்பளம் குறித்து தீயாய் சமூக வலைதளத்தில் செய்திகள் பரவின. அதாவது, நடிகை மமிதா பைஜு ரூ.15 கோடி சம்பளம் பெற்றதாக தகவல் உலா வந்தது. இதனை பார்த்த பலரும் ஒரே படத்தில் இத்தனை கோடி சம்பளமா என்று கமெண்ட் செய்து வந்தனர். இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை மமிதா பைஜு நேர்காணல் ஒன்றில் விளக்கமளித்துள்ளார்.வதந்திக்கு முற்றுப்புள்ளிஅதில், ”சமூக வலைதளத்தில் நான் ரூ.15 கோடி சம்பளம் பெற்றதாக செய்தி பரவி வந்தது. நான் சோஷியல் மீடியாவில் ஆக்டிவேட்டாக இல்லாதததால் எனக்கு அது தெரியவில்லை. எனக்கு ஒருவர் அந்த செய்தியின் லிங்கை அனுப்பினார். அதன் கமெண்ட் பார்த்ததும் நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன். மக்கள் அதை உண்மை என்று நம்பியுள்ளனர். சிலர் இவ்வளவு பெரிய ஆளாகிவிட்டாரா என்று கமெண்ட் செய்துள்ளனர். சமூக வலைதளத்தில் பரவும் செய்தி எல்லாம் உண்மை கிடையாது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.’டியூட்’ திரைப்பட வாய்ப்புதொடர்ந்து பேசிய நடிகை மமிதா பைஜு ‘டியூட்’ திரைப்பட வாய்ப்பு குறித்து பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதாவது, “சூப்பர் சரண்யா திரைப்படத்தை பார்த்த இயக்குநர் கீர்த்தீஸ்வரன் என்னை அணுகி ‘டியூட்’ திரைப்படம் குறித்து பேசினார். முழு கதையையும் என் தோளில் தாங்கும் ஒரு கதாபாத்திரத்தை வழங்கினார். நான் மலையாளியாக இருந்தாலும் தமிழ் கலாசாரத்தில் வேரூன்றிய ஒரு பாத்திரத்தை என்னிடம் ஒப்படைத்தார். இதற்கு முன்பு நான் ‘ரெபேல்’ திரைப்படத்தில் நடித்திருந்தேன். ஆனால், அந்த படத்தில் எனக்கான காட்சிகள் பெரிதாக இருக்காது. அதனால், ‘டியூட்’ திரைப்படத்தின் கதாபாத்திரத்தை அழகாக அணுகினேன். இப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம்” என்றார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன