Connect with us

சினிமா

தனுஷ் ஸ்டைலை Follow பண்ணும் ஆர்.ஜே. பாலாஜி.. விருது விழாவைக் கலக்கிய உரை.!

Published

on

Loading

தனுஷ் ஸ்டைலை Follow பண்ணும் ஆர்.ஜே. பாலாஜி.. விருது விழாவைக் கலக்கிய உரை.!

தமிழ் சினிமா உலகத்தில் காமெடி, விமர்சனம், சமூகப் பார்வை, உணர்ச்சி என அனைத்தையும் கலந்த ஒரு தனித்துவமான பாணியில் பேசுபவர் ஆர்.ஜே. பாலாஜி. ஒரு காலத்தில் ரேடியோ ஜாக்கியாக ஆரம்பித்து, பின்னர் விமர்சகர், பின்னர் நடிகர், தயாரிப்பாளர் என வெவ்வேறு பரிமாணங்களில் தன்னை நிரூபித்தவர்.இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில், அவர் நிகழ்ச்சியை கலகலப்பாகவே மாற்றியுள்ளார். குறிப்பாக, தனுஷ் பேசிய ஸ்டைலை நகைச்சுவை சாயலுடன் பின்பற்றி, பலருக்கும் சிரிப்பையும் சிந்தனையையும் ஏற்படுத்தியுள்ளார். தற்போது இந்த உரை சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.பிரபல திரைப்பட விருது வழங்கும் விழா ஒன்று சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில், ஆர்.ஜே. பாலாஜி தனுஷ் ஸ்டைலில் கதைத்துள்ளார். அதாவது, “ஏன் நான்லாம் கோட் போடக்கூடாதா? நான் எல்லாம் Louis Vuitton கண்ணாடி போடக்கூடாதா? நான் Private Jet வாங்கக்கூடாதா? நான்லாம் கட்சி ஆரம்பிக்கக்கூடாதா?” என்று தெரிவித்துள்ளார்.இந்த வார்த்தைகள் விழா மண்டபத்தில் இருந்த அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது. இவை தனுஷின் பாணியில் காணப்பட்டாலும் பல சினிமா விமர்சனங்களைக் கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன