தொழில்நுட்பம்
தீபாவளி சரவெடி: மைலேஜ், ரேஞ்ச், பட்ஜெட்… வெறும் ரூ.29,999 முதல் தொடங்கும் 5 சிறந்த இ-ஸ்கூட்டர்கள்!
தீபாவளி சரவெடி: மைலேஜ், ரேஞ்ச், பட்ஜெட்… வெறும் ரூ.29,999 முதல் தொடங்கும் 5 சிறந்த இ-ஸ்கூட்டர்கள்!
தீபாவளி பண்டிகைக் காலத்தில், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் ரூ.50,000-க்கும் குறைவான விலையில் பல சிறந்த இ-ஸ்கூட்டர் மாடல்கள் சந்தையில் கிடைக்கின்றன. பட்ஜெட்டுக்கு ஏற்றதாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உகந்ததாகவும் இந்த ஸ்கூட்டர்கள் இருப்பதால், சந்தை தேவை அதிகரித்துள்ளது. இந்திய இருசக்கர வாகன நிறுவனங்கள், சாதாரண மக்கள் மற்றும் தினசரி பயணம் செய்வோரை குறிவைத்து மேம்பட்ட மற்றும் நிலையான இ-ஸ்கூட்டர்களையும் (Electric Scooters) அறிமுகப்படுத்தி உள்ளன.முக்கிய சிறப்பம்சங்கள்:இந்தப் பட்டியலில், வெறும் ரூ. 29,999 எக்ஸ்-ஷோரூம் விலையுடன் கோமாகி XR1 ஸ்கூட்டர் மிகவும் மலிவான தேர்வாக உள்ளது. பல ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற பெட்ரோல் மாடலான TVS XL100 ஹெவி டியூட்டி (ரூ. 43,900) தனது 80 கிமீ மைலேஜுடன் நம்பகமான தேர்வாக உள்ளது.ஓலா கிக் பிளஸ் (ரூ. 49,999) மாடலானது, 81 கிமீ முதல் 157 கிமீ வரையிலான சிறந்த ரேஞ்ச் திறனை வழங்குகிறது. கோமாகி, ஹீரோ விடா மற்றும் ஓலா ஆகிய நிறுவனங்களின் இ-ஸ்கூட்டர்கள் (EV) இந்தத் தீபாவளி சீசனில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நிலையான போக்குவரத்துக்கு சரியான தேர்வாக அமைகின்றன.
